அந்த வேலை பார்த்தது யார்? அடிக்க துடிக்கும் அமைரா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

அந்த வேலை பார்த்தது யார்…? அடிக்க துடிக்கும் அமைரா..! கே.வி ஆனந்த் இயக்கிய அனேகன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.

இப்படத்தில் அவருடைய நடிப்பும், அழகும் பெரிதும் பேசப்பட்டது. அவர் தற்போது இந்தியில் ‘மிஸ்டர் எக்ஸ்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். அதாவது கண்ணுக்கு தெரியாத கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இதில் நடித்த அனுபவம்பற்றி அவர் சமீபத்தில் கூறினார். கண்ணுக்கு தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது மிக சிரமம்.

எங்காவது ஒரு இடத்தில் சிறு புள்ளியை அடையாளமாக கொடுத்துவிட்டு அதையே கற்பனையில் கதாபாத்திரமாக்கிக்கொண்டு நடிக்க வேண்டும். நிஜ வாழ்க்கையில் உருவம் இல்லாமல் உங்களால் செயல்பட முடிந்தால் என்ன செய்வீர்கள் என்கிறார்கள்.

அப்படியொரு அதிசய சக்தி கிடைத்தால் நிறைய செய்யலாம். முதலில், பலரை கன்னத்தில் அறையவே எண்ணுவேன். அவர்கள் யாரென்று வெளிப்படையாக சொல்ல மாட்டேன். நேரடியாக கன்னத்தில் அறைந்தால் நிச்சயம் அவர்கள் கையில் சிக்க வேண்டி இருக்கும்.
கண்ணுக்கு தெரியாத உருவமாக இருந்தால் எளிதாக அறைந்துவிட்டு தப்பித்துவிடலாம் அல்லவா? இவ்வாறு அமைரா தஸ்தூர் கூறினார். அமைராவிடம் யார் என்ன செய்தார்களோ தெரியவில்லை..?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit