ஐபோன் இவ்வளவு விஷயங்களைச் செய்யுமா? இது தெரியாமப் போச்சே!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகளவில் பிரபலமான ஐபோன்களை தினசரி வாழ்வில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் எத்தனை பேர் அவைகளில் மறைந்திருக்கும் அத்தனை அம்சங்களையும் பயன்படுத்துகின்றனர் என்றால் அதன் எண்ணிக்கை நிச்சயம் குறைவாக தான் இருக்கும். அவ்வாறு மறைக்கப்பட்டிருக்கும் பல அம்சங்கள் பொதுவாக ஐபோனின் செட்டிங்ஸ் பகுதியில் தான் இருக்கும். கீழ் வரும் ஸ்லைடர்களில் ஐபோன்களால் செய்ய முடியும் என உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்…

slider1

ஐபோனை அன்லாக் செ்யாமல் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். இதற்கு லாக் ஸ்கிரீனை கீழ் பக்கமாக இழுத்து டெக்ஸ்ட் நோட்டிபிகேஷனை இடது புறமாக ஸ்வைப் செய்தால் பதில் அளிக்க திரை ஒன்று காணப்படும். இவ்வாறு போனை அன்லாக் செய்யாமல் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும்.

slider2

மற்ற செயலிகளை பயன்படுத்தும் போது குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். இவ்வாறு செய்ய முன்பு செய்ததை போன்று நோட்டிபிகேஷன் பாரை கீழ் பக்கமாக ஸ்வைப் செய்யலாம்.

slider3

ஐபோன் பேட்டரியை எந்த செயலி அதிகமாக பயன்படுத்துகின்றது என்பதை பார்க்க முடியும். இதற்கு Settings >General >Usage>Battery Usage சென்று பார்க்கலாம்.

slider4

புகைப்படங்களை பார்க்க மெசேஜஸ் செயலி சென்று அங்கு டீடெயில்ஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

slider5

இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து போகும் ஆடியோ க்ளிப் அல்லது வீடியோக்களை அனுப்ப முடியும். இவ்வாறு செய்ய Settings>Messages சென்று audio and video messages ஆப்ஷனை தேர்வு செய்து இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து போகமாறு செட் செய்ய வேண்டும்.

slider6

நீங்கள் இருக்கும் இடத்தை சுலபமாக தெரிவிக்க மெசேஜின் வலது புறமாக காணப்படும் டீடெயில்ஸ் பட்டனை க்ளிக் செய்து “Send My Location.” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

slider7

உங்களது குடும்பத்தாருக்கு நீங்கள் இருக்கும் இடத்தை தெரிவிக்க முன்பு செய்ததை போல “Share My Location” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

slider8

டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன்களை ம்யூட் செய்ய முடியும். இவ்வாறு செய்ய மெசேஜிங் ஆப்ஷனிற்கு சென்று “Do Not Disturb.” ஆப்ஷனை தேர்வு செய்தால் போதுமானது.

slider9

க்ரூப் கான்வெர்சேஷனில் இருந்து வெளியேற டீடெயில்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து “Leave Conversation.” என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதுமானது.

slider10

க்ரூப் கான்வெர்சேஷனில் க்ரூப் பெயரிட டீடெயில்ஸ் சென்று “Group Name” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து க்ரூப் பெயரை குறிப்பிடலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*