மாமியார்களே, மருமக டீ குடுத்தா உடனே வாங்கி குடிச்சிராதீங்க.. குடிச்சிராதீங்க.. குடிச்சிராதீங்க!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்நத்வர் தீபக். 34 வயதான இவரது மனைவி பெயர் ரேகா நாக்வன்ஷி (30). இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணமாகி வந்தது முதலே மாமியார், நாத்தனார் தொல்லை தாங்க முடியாமல் அவதிப்பட்டார் ரேகா.

ஒரு அடிமை போல ரேகாவை வேலை வாங்கி வந்துள்ளனர் அவரது கணவர் வீட்டார். பொறுத்துப் பார்த்த ரேகா கணவரிடம் ஒருமுறை பொங்கி விட்டார். தனிக் குடித்தனம் போக வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆரம்பத்தில் கணவர் இதற்கு மறுத்தாலும் பின்னர் தனிக் குடித்தனம் போக சம்மதித்தார். ஆனால் அங்கு போன பின்னர் நமது குழந்தைக்காக எங்களது வீட்டுக்கே போகலாம் என்று வற்புறுத்தியுள்ளார் கணவர்.

safe_image3415

இதையடுத்து சில நிபந்தனைகளுடன் இதற்கு ரேகா ஒத்துக் கொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு மாமியார் சூரஜ், மாமனார் அஜீத், நாத்தனார்கள் கொடுமை தலை விரித்தாடத் தொடங்கி விட்டது. இதனால் வெகுண்ட ரேகா, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். அதன் இறுதியில்தான் இந்த நூதன ஐடியா அவருக்கு வந்துள்ளது. அதாவது தனது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்களுக்கு தரும் டீயில் சிறு நீர் கழித்து அதைக் கொடுக்க ஆரம்பித்தார்.

கடந்த ஒரு வருடமாக இதைச் செய்து வந்துள்ளார். ஒரு நாள் மாமியார் சூரஜ், சமையல் கட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அங்கு ரேகா டீ பாத்திரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து என்ன என்று கேட்டபோதுதான் கடந்த ஒருவருடமாக நடந்து வந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சூரஜ், அஜீத் ஆகியோர் போலீஸில் போய் புகார் கொடுத்தனர்.

ஆனால் போலீஸாரோ, இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறி விட்டனர். இதனால் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக தங்களை இழிவுபடுத்தி வந்த தங்களது மருமகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது ரேகா தனது கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து போய் விட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*