கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

பிறப்பு : - இறப்பு :

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் கெப் வண்டி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முரசுமோட்டை சிவன் கோவில் பகுதியில் நடந்துச் சென்றவர் மீது இன்று அதிகாலை கெப் வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்றதன் பின்னர் கெப் வண்டி பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இயக்கச்சி பகுதியை சேர்ந்த 85 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், கிளிநொச்சி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit