வீடு சின்னதா இருந்தா…

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்பெல்லாம் முன்பக்கம், பின்பக்கம், தோட்டம், தாழ்வாராம், கிணறு என ஒரு வீடு என்றால் இத்தனையும் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது வீடு என்றால் ஒரு அறை அல்லது இரண்டு அறைகள் கொண்டதாகக் கூட உள்ளது.

நான்கு பேர் கொண்ட சிறிய குடும்பத்துக்கு இது போதும் என்ற மனப்பக்குவம் வந்துவிட்டது. அந்த வீட்டுக்குள்ளேயே கழிவறையும், குழாய்களும் வந்துவிட்டதால், எப்படி மனித மனம் சுருங்கிவிட்டதோ அதே போல வீடுகளும் சுருங்கிவிட்டன.

ஆனால் சிறிய வீடுகளில் வாழ்வதென்பது அவ்வளவு சிக்கலான விஷயமே அல்ல. ஏனெனில் அவற்றை பராமரிக்கும் செலவும், நேரமும் குறைவு என்பது ஒரு ஆறுதலான விஷயம்.

என்ன ஒரு குறை என்றால், பெரிய வீடுகளைப் போல வித விதமான அலங்காரப் பொருட்களையும், இடத்தை அடைக்கும் ஃபர்னிச்சர்களையும் போட்டு அலங்கரிப்பதென்பது இயலாத ஒன்று. மேலும் குடும்பத் தலைவியும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் தனி நேரம் ஒத்துக்குதல் என்பதும் முடியாத விஷயம்.

எனவே, குறைந்த நேரத்தில், எளிய முறையில், குறைந்த பொருட்செலவில் சிறிய வீட்டை அழகாக்குவதற்கு சில விஷயங்கள் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்…

வரவேற்பறையை அடைக்காதீர்கள்…

சிறிய வரவேற்பறையில் சோஃபா மற்றும் பிற ஃபர்னிச்சர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் ஆடம்பர, விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என நினைத்தாலும் அவை அறையின் வழியை அடைக்காமலும், தேவையான அளவுக்கு நடக்கும் வழிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கட்டும். சோபா இருக்கிறதே என்றால் ஓரமாக ஓரிடத்தில் போட்டு வையுங்கள். பொதுவாகவே சிறிய வீடுகளில் வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைப்பது அதன் இடத்தை விசாலமாகக் காட்ட உதவும்.

படங்களால் வீட்டை அலங்கரிப்பதை தவிர்க்கலாம்

பெரிய வீடுகளில் அல்லது விசாலமான இடங்களில் இருக்கும் அலங்காரப் பொருட்கள், படங்களைப் பார்த்துவிட்டு அதே போல வாங்கி வந்து சிறிய வீட்டை நிரப்பாதீர்கள். சிறிய அறைகளில் இருக்கும் சுவர்களில் இந்தப் படங்களை மாட்டும் போது வீட்டு சுவர் முழுவதும் அடைக்கப்படும். இதனால் இருப்பிடம் இன்னும் சிறியதாகத் தெரியும்.

அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

தெய்வங்களின் படங்கள் பூஜையறையில் மட்டும் இருக்கட்டும். பல படங்களையும், அலங்காரப் பொருட்களையும் மாட்டும் போது வீடு அடைந்து போய்விடும். அதோடு மட்டும் அல்லாமல், அதனை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒட்டடை படிந்து சுத்தமில்லாதது போன்றும், வீட்டில் இடமில்லாததை எடுத்துக் காட்டும் விதமாகவும் அமைந்து விடும்.

வீட்டுக்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள்

அழகான, சிறிய, உபயோகமான ஸ்மார்ட் ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். இதனால் அதை வைக்கும் இடம் குறைக்கப்படுவதுடன் பயனும் இரட்டிப்பாகும். உதாரணமாக டேபிளில் ட்ராயர் மற்றும் அடுக்குகள் உள்ள மாதிரி வாங்குங்கள். செண்டர் டேபிளில் கீழும் அடுக்குகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்தீர்களானால் உங்கள் தினசரிகள் அதில் வரும். மல்ட்டி ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஃபர்னிச்சர்களத் தேர்ந்தெடுங்கள். மேலும் உபயோகமில்லாத நேரங்களில் மடித்து வைக்கக்கூடிய ஃபர்னிச்சர்களை உபயோகிப்பதால் இடம் அடையாமல் இருக்கும்.

அழகுக்காக மட்டும் வேண்டாம்

வீடு சிறியதாக இருக்கும் பட்சத்தில் அழகுக்காக மட்டும் என்றால் அந்த பொருளை வாங்குவதை தவிர்க்கலாம். உபயோகமான பொருட்களை மட்டுமே வீட்டில் வைக்கும் பட்சத்தில் வீட்டை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். அழகுப் பொருட்களை அடுக்கி வைப்பதால் இடமும் குறையும். வேலையும் அதிகமாகும்.

கண்ணாடியின் மூலம்…

வித்தியாசமான ஐடியாவாகத் தெரியலாம். ஆனால், உங்கள் வீட்டின் அளவை இது அதிகப்படுத்திக் காட்டுவது கண்டு மகிழ்வீர்கள். வரவேற்பறையின் இரு எதெரெதிர்ப் பக்கங்களில் கண்ணாடிகள் வையுங்கள். இந்தக் கண்ணாடிகள் அளவில் பெரிதாக இருத்தல் நல்லது. சுவர் சிறிதாக இருக்கும் பட்சத்தில் முழு சுவரையும் மறைக்கும் வகையில் கண்ணாடியால் அலங்கரிக்கலாம். இந்தக் கண்ணாடிகள் தரையிலிருந்து நான்கடி உயரத்திற்கும் மொத்த அகலம் இரண்டடி கொண்டதாகவும் நீளவாக்கில் தொடர்ந்து சுவர் முழுக்க இருக்கும்படியும் அமைக்கலாம். இதனால் உங்கள் வீடு பெரிதாகக் காட்டப்படுவது கண்டு நிச்சயம் மகிழ்வீர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*