யேமனிலுள்ள இலங்கையர்களை சந்திப்பதற்கு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் தீர்மானம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிளர்ச்சிகளால் யேமனில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை சந்திப்பதற்கு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் இன்று அவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

கிளர்ச்சிகளால் யேமனின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கைப் பணியாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறினார்.

இலங்கைப் பணியாளர்களை சந்திக்கவுள்ள தூதரக அதிகாரிகள், அவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய, யேமனில் இடம்பெறும் கிளர்ச்சிகளில் 70 இலங்கைப் பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதாக மங்கள ரன்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யேமனிலுள்ள இலங்கைப் பணியாளர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு மீள அழைத்துவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெட்டிலுள்ள இலங்கைத் தூதரகம், சனா நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம், அகதிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யேமனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை 0112 323 015 மற்றும் 0115 839 414 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தர முடியுமென அமைச்சு அறிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*