தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டம் ரத்து ஆகிறது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி மேல்-சபையில் பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

மீத்தேன் எரிவாயு திட்டம்

இதைத்தொடர்ந்து, இந்த எரிவாயுவை எடுத்து பயன்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு, இதற்கான ஒப்பந்தத்தை ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்து ஆனது.

இதனால் அந்த நிறுவனம், அந்த திட்டம் தொடர்பான சில பூர்வாங்க பணிகளை தொடங்கியது. தஞ்சாவூரில் ஓர் அலுவலகத்தையும் திறந்தது.

விவசாயிகள்கடும் எதிர்ப்பு

இதற்கிடையே, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதித்தால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்துடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் கடந்த ஜனவரி 4-ந் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது.

இதனால் அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கக்கூடாது என்று மத்திய அரசை வற்புறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கிடையே, தஞ்சையில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகமும் மூடப்பட்டது.

மேல்-சபையில் மந்திரி பதில்

இந்த நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. டெல்லி மேல்- சபையில் இந்த திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி அந்த பகுதி விவசாயிகள் சங்கம் சார்பாக மத்திய அரசிடம் கோரிக்கை மனு ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்றும், அது குறித்து மத்திய அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்றும் அப்போது அவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்து பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை

தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமரிடம் அளித்த மனு பெட்ரோலிய துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்காக ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான முக்கிய ஆவணங் களை தாக்கல் செய்யவில்லை.

ஒப்பந்தம் ரத்து

மேலும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதியுடன் அந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த பகுதியில் அந்த நிறுவனம் இதுவரை மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.) மீத்தேன் எரிவாயு எடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*