கடலோர பகுதி பாதுகாப்பு ஒத்திகை முடிந்தது; கப்பலை கடத்திய தீவிரவாதிகள் பிடிபட்டனர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி போலீசார் இணைந்து நடத்திய கடலோர பாதுகாப்பு ஒத்திகை முடிந்தது. ஒத்திகையின்போது சென்னை துறைமுகத்தில் கப்பலை கடத்திய தீவிரவாதிகளை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

தீவிரவாதிகள் ஊடுருவல்

கடல் வழியாக வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலோர மாநிலங்களில் 6 மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

தீவிரவாதிகள் வேடத்தில் கமாண்டோபடை வீரர்கள் கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது.

கப்பலை கடத்தினார்கள்

ஆந்திரா, புதுச்சேரி மாநில போலீசாரும் தமிழக போலீசாருடன் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தினார்கள். தமிழகத்தில் சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் பொதுமக்கள் கூடும் இடங்கள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், துறைமுகம் போன்றவை பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.

இந்த ஒத்திகையில் போலீசார், கடற்படை, கடலோர காவல்படை, சுங்க இலாகா, மீன்வளத்துறை, வருவாய்த்துறையினர் கலந்துகொண்டார்கள். தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவிய கமாண்டோ படையினரை போலீசார் மடக்கி பிடித்தனர். நேற்று மாலை 5 மணிக்கு சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாலத்தீவு என்ற கப்பலை தீவிரவாதிகள் வேடத்தில் வந்த 3 பேர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுவிட்டனர்.

ஒத்திகை முடிந்தது

கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் படகில் விரட்டிச் சென்று நடுக்கடலில் கப்பலில் இருந்த தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில் கப்பலை கடத்தியவர்கள் சரண் அடைந்தனர்.

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, ‘‘பாதுகாப்பு ஒத்திகை கடந்த முறையைவிட இந்த முறை மேலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஊடுருவிய 63 பேரை போலீசார் பிடித்து விட்டனர். கடலூரில் மட்டும், ஒரு வணிகவளாகத்தில் தீவிரவாதிகள் வேடத்தில் வந்தவர்கள் நுழைந்துவிட்டனர். தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி வந்தால், அவர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு நமது போலீஸ்படை நல்ல பயிற்சி பெற்றுள்ளது’’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*