சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை : ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவில் காணாமல் போனவர்கள் விவகாரம் ! (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையமாக கொண்டு, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் உப மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

AMNESTY international ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டில் ஐ.நாவின் காணாமல் போனவர்கள் மற்றும் துன்புறுத்தல் விவகாரங்களுக்கான சிறப்புபிரதிநிதி JUAN E.MEMNEZ அவர்கள் பங்கெடுத்திருந்தார்

சிறிலங்காவில் இருந்து ஆகிய காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்து வரும் RUKI Fernanodo, BHAVANI Fonzeka, SANDYA Eknelygodo ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

கருத்துரைகள், ஒளிப்படங்கள், புள்ளிவிபரங்கள் என அமைந்திருந்த இந்த உபமாநாட்டில், 1983ம் ஆண்டிலிருந்து 80 ஆயிரம் பேர் சிறிலங்காவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணமல்போனவர்களது உறவினர்களது போராட்டங்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர், போராட்டங்களுக்கு செல்வோர் தடுக்கப்படுவது, பௌத்த பிக்குகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது போன்ற பல்வேறு விடயங்கள் ஒளிப்படச் செய்திகளாக காண்பிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதனையே காணாவர்களது உறவினர்களது போராட்டங்களும், இவ்வாறான மாநாடுகளும் எடுத்துக்காட்டுவதாக நிகழ்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*