என்மீதும், அனந்திமீதும் உள்நோக்கத்தோடு தாக்குதல் நடாத்தப்படுகிறது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் ஒரு நேர்காணல் – ஈழநாடு

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந் திரன் அவர்களது கொடும்பாவி எரிக்கப் பட்டது தொடர்பாகவும், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை விமர்சித்தது தொடர்பாகவும் உங்கள்மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒழுங் காற்று நடவடிக்கைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே? 

சுரேஷ்: இந்தப் பிரச்சனை எங்கிருந்து வருகின்றது என்று சொன்னால், நானும் கலந்துகொண்ட காணமல் போனவர் களின் ஊர்வலத்தில் ஒரு உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. அந்த உருவப் பொம்மை எரிக்கப்பட்டதற்கும் எனக்கும் நிச்சயமாக தொடர்பு இல்லை என்பது உண்மை. அதை நான் ஊடகர்கள் சந்திப்பில் சொல்லி இருக்கிறேன். அந்தச் செய்தி பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருந்தது. இணையத்தளங்களிலும் வந்தி ருந்தது. அப்படி இருக்கும் போது ‘இவர் அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை, ஆகவே அதற்கும் இவருக்கும் சம்மந்தம் இருக்கலாம்’ என்று தெரிவித்திருக்கி றார்கள்.

அப்படிப் பார்த்தால் தமிழரசு கட்சியினுடைய பிரதித் தலைவரும் அந்த ஊர் வலத்தில் நின்றிருந்தார். அவருக்கு எதி ராக இவர்கள் கண்டனத்தீர்மானம் நிறை வேற்றவில்லை. அங்கு ஜெகதீபன் என்ற மாகாண சபை உறுப்பினரும் இருந்தார். அவருக்கு எதிராகவும் கண்டனத் தீர் மானம் நிறைவேற்றப்படவில்லை. இன் னும் பல தமிழரசுக் கட்சி பிரமுகரகள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆகவே சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கும், அனந்திக் கும் எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சில தேவைகள் அவர்களுக்கு இருக்கின்றன.

இது, அவர்கள் விடுகின்ற தவறுகளை நான் சுட்டிக் காட்டுவதற்காக இருக்க லாம், அவர்களது பிழைகளை எடுத்துச் சொல்வதற்காக இருக்கலாம். என்மீது, உருவப் பொம்மை எரித்தற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, வருத்தம் தெரிவிக்க வில்லை, தொடர்ச்சியாக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றது.

இதே கருத்தைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்க ளும் தெரிவித்திருக்கிறார். ‘சுதந்திரதினத் தில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியும் அவர்கள் கேட்காமல் சென்றார்கள், அவ் விதமே உள்ளூர் விசாரணையை நாங் கள் ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று அவர் சொல்லியது பத்திரிகைகள், ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது. ஆனால் மாவை மீது எந்த நடவடிக்கை யும் இல்லை.

அதிலும், மாவையும் சேர்ந்துதான் இந்த கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவந் திருக்கலாம் என எண்ணுகின்றேன். இது புரியாத புதிராக இருக்கிறது. உண்மை யில் தமிழரசுக் கட்சி சரியான முறையில் சிந்தித்து செயல்படுகிறதா? சரியான நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கிறதா? அல்லது ஏனோதானோ என்று சொல்லி

அதாவது, தங்களுக்கு எதிராக இருவர் பிரச்சனையாக இருக்கிறார்கள். அனந்தி அவர்களது கட்சியாக இருந்தாலும் அவர் தாங்கள் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்பட வில்லை. சுரேஸ் ஊடகப் பேச்சாளர் என்று சொல்லி விட்டு தங்களை விமர்சிக் கின்றார் என்று தீர்மானித்திருக்கலாம். நான் ‘பிபிசி’ செவ்வியில், வேண்டு மென்றே சுமந்திரனையோ, அல்லது சம்மந்தனையோ விமர்சிக்கவில்லை. எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோத மாக நடப்பது பற்றி நான் பேசி இருக் கின்றேன். அதாவது சுதந்திர தினத்திற்கு போனது பிழை என்று சொல்லி இருக்கி றேன். அவ்வாறே உள்ளூர் விசார ணையை ஏற்றுக் கொண்டது தவறு என்று நான் சொல்லி இருக்கிறேன். அது சரி என்று அவர்கள் பத்திரிகைகளுக்கு தெரி வித்தது தவறு என்று சொல்லி இருக்கி றேன். அவர்களது கருத்துக்களைப் பிழை என்று சொல்வது, அவர்களைத் தரக் குறைவாக விமர்சிக்கிறேன் என்பது அல்ல. அவர்களின் கருத்து கூட்டமைப் பின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டது. கூட்டமைப்பின் கருத்துக்களோடும் கொள்கையோடும் ஒத்துப் போகாதது. அவர்களின் கட்சியில் இருப்பவர்களே அதை பிழை என்று சொல்லிகிறார்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தெரிந்தெடுத்து, விமர்சனம் செய்கிறார் என்று சொல்வதும் தவறு, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததும் என்னைப் பொறுத்தவரை தவறான விடயம்தான்.

கேள்வி: இந்தப் பிரச்சினை உருவானதற் கான அடிப்படை குறித்து எந்தவித கேள்வியும் அங்கு எழுப்பப்பட்டதாக தகவல் இல்லையே?

சுரேஷ்: தமிழரசுக் கட்சியின் உட்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. பத்திரிகைகளில் வந்த விட யங்களைத்தான் நாம் பார்க்கின்றோம்.

உண்மை என்னவெனில், பத்திரிகைகளி லும் இணையத் தளங்களிலும், இவர் களின் இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டித்து, புலம்பெயர் மக்கள் கருத்துக் களைப் பதிவு செய்திருந்தனர். யாழ்ப் பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, இவ் விடயம் தொடர் பாக சுமந்திரனிடம் தாம் கேள்வி எழுப்ப இருப்பதாக மாவை தெரிவித்திருக்கிறார். அந்த மாநாட்டில் இப்படி கேள்வி எழுப் பப்பட்டதா, பத்திரிகைகளுக்குத் தான் அப்படிச் சொன்னது குறித்து மாவை எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஒருவிடயம் சொல்லப்படுகிறது தேர்தலுக்கு பின் தமிழ்தேசியக் கூட்ட மைப்பு எடுத்த முடிவுகளை தங்கள் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று அங்கே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்படியானால், தலைவர் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டது சரி என் றும், உள்ளக விசாரணை சரி என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சலில் இருப்பது சரி என்றும் அவர் ஏற்றுக் கொள்கிறார் கள் போலும். இதைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் செய்ததை இவர்கள் ஏற்றுக் கொண்டதை உறுதிப் படுத்துவதாகத் தீர்மானம் இருக் கின்றது.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற அடையாளமே உங்க ளுக்கு இருக்கிறது. அப்படி இருக்க சுமந்திரனின் செவ்வியும், அவரது அறிக் கைகளும் தானே ஊடகங்களில் வெளி வருகின்றது?

சுரேஷ்: தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும், சர்வதேச தொடர்பாள ராகவும், தமிழரசு கட்சியின் பிரதிச் செயலாளராகவும் அவரை வைத்திருக் கிறார்கள். தமிழரசுக் கட்சி என்று சொன் னாலும் கூட்டமைப்பு என்ற வகையிலேயே சகலதையும் செய்து கொண்டிருக் கிறார்கள்.

எல்லோரும் சேர்ந்து சம்மந்தரை நீங் கள்தான் தலைவர் என்று சொன்னோமே தவிர, கூட்டமைப்பிற்கு செயலாளர் கிடை யாது. கூட்டமைப்பிற்கு ஒரு பொருளாளர் கிடையாது. கூட்டமைப்பிற்கு என்று மத் திய குழுவோ, செயற் குழுவோ, கொள்கை வகுப்பாளரோ கிடையாது. வெளிநாட்டு தொடர்பு குழுவோ, உள் நாட்டு விவகாரங்களை கையாளும் குழுவோ எதுவுமே கிடையாது. கூட்ட மைப்பு என்பது நான்கு கட்சிகளைக் கொண்ட ஒரு அணி மட்டுமே.

கூட்டமைப்புக்கு என்று யாப்போ ஒழுக் கக் கட்டுப்பாடு என்ற எதுமே இல்லை. அப்படி இருந்தால் மாத்திரமே உங்கள் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.

கேள்வி: 2009 இற்கு பிற்பட்ட காலத்தில் புலம் பெயர் தமிழர்களை அவமானப் படுத்தும், புறம் தள்ளும், அல்லது மலினப்படுத்தும் வகையிலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வரு கின்றது. இது குறித்து, கூட்டமைப்பில் அங்கம்பெறும் ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில், உங்களது நிலப்பாடு என்ன?

சுரேஷ்: என்னைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பில் நானும் ஒரு அங்கத்தி னன். நான் ஒரு நாளும் புலம்பெயர் மக்களை புறந்தள்ளியதில்லை. எமக்குள் இருப்பது போலவே புலம்பெயர் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட குழுக்களும், கருத்துக்களும், மோதல்களும் இருப்ப தென்பது உண்மைதான். ஆனால் யுத்தத் திற்கு பிற்பாடு, தமிழ் மக்களின் பிரச் சினைகள் இன்று ஐ.நா வரை சென்றி ருப்பதற்கு, அதில் புலம் பெயர் தமிழரின் பெரும் பங்களிப்பு இருக்கிறது. அவர்கள் வாழுகின்ற நாடுகள் மற்றும் அமெரிக்க உட்பட அனைத்து நாடுகளுக்கும் புலம் பெயர் மக்கள் கொடுத்த கொடுத்து வருகின்ற அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணியாக இருந்து வந்திருக்கிறது. ஆகவே நான் அவர்களை எந்தவொரு காலத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் கொச்சைப் படுத்தியது இல்லை ஆனால், கூட்டமைப்பில் உள்ள வேறு பலர் அவ்வாறு செய்திருக்கலாம்.

கேள்வி: புலம் பெயர் மக்களுக்குள் பிரிவு கள் இருந்தாலும், பல பிளவுகள் இருந் தாலும், இலட்சியத்தில் மாறுபட்ட கருத்து இல்லை. ஜெனிவா போராட்டமாக இருந் தாலும், நாடுகள் ரீதியான போராட்டமாக இருந்தாலும் ஒருமித்த நிலையில், ஒரே இலட்சியத்தோடு போராடுகின்றார்கள். அவர்களது கருத்தையும் கூட்டமைப்பு உள்வாங்கி செய்படுவதுதானே சரி யானதாக இருக்கும்?

சுரேஷ்: புலம் பெயர் தமிழர் பிளவுபட்டி ருந்தாலும் ஒருமித்த கருத்தில் இருப்பது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. கூட்டமைப்பு அதை எவ்வாறு கையாளப் போகின்றது என்பது சில சந்தர்ப்பங்க ளில் விமர்சனத்துக்குரிய விடயமாக இருக்கலாம்.

கேள்வி: எதிர்வரும் 16-ம் திகதி புலம் பெயர் தமிழர்கள் ஜெனிவாவில் பேரணி நடத்துகிறார்கள். பிரான்சிலிருந்தும் பிரத் தியேக தொடருந்து செல்கிறது. இதில் நீங்கள் பங்குபற்றுகிறீர்களா என்பது தெரியவில்லை. இப்படியான சந்தர்ப்பங்க ளில் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழருடன் ஒரு கருத்து உடன்பாடு செய்யுமா? கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகை யில் இதை உங்களிடம் கேட்கிறோம்.

சுரேஷ்: ஒவ்வெருவருடமும் ஐரோப்பவில் இருக்கும் மக்கள் ஜெனிவாவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் செய்கின்றார்கள். அப் படியான போராட்டங்களில் நாமும் கலந்து கொண்டிருக்கிறோம். கடந்த வருடம் நான் வந்திருக்கிறேன் என எண்ணுகிறேன். இந்த முறை இலங்கை தொடர்பான பிரேரணை செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை யில் இந்த முறை கூட்டமைப்பைச் சேர்ந்த எத்தனை பேர் பங்குபற்றுவார் கள் என்று தெரியவில்லை. அதனுடைய தேவை என்ன, அவர்கள் பங்குபற்றுவ தால் என்ன பிரயோசனம் என்ற பல கேள்விகள் இருக்கின்றன. அதில் சாத்தி யக்கூறுகள் இருக்கும் என்றால் நிச்சய மாக வரலாம். இது குறித்து கூட்டமைப்பு இதுவரை பேசவில்லை. யார் வருவார் கள் என்பதை உறுதியாகக் கூறமுடியாது.

கேள்வி: கடைசியாக நடைபெற்ற பத்திரி கையாளர் மகாநாட்டில் சுமந்திரன் புலம் பெயர் தமிழீழச் செயற்பாட்டாளர்களை ‘வாலுகள்’ என்று குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். கூட்டமைப்பு என்ற ரீதியில் உங்கள் மீதும் இது தாக்கத்தை உண் டாக்கும் என்பதால், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சுரேஷ்: அந்த தனிப்பட்ட நபரின் கருத்து கூட்டமைப்பின் கருத்தாக நீங்கள் எடுத் துக்கொள்ளத் தேவையில்லை. கூட்ட மைப்பில் நான்கு கட்சிகள் இருக்கின்றன. செல்வம் அடைக்கலநாதனிடமோ அல் லது மாவை சேனாதிராஜாவிடமோ கேட் டாலும் இதே கருத்தைதான் சொல்வார் கள். என்னைப் பொறுத்தவரை அது தனி நபரின் கருத்தே அன்றி கூட்டமைப்பின் கருத்து அல்ல.

கேள்வி: இன்று (செவ்வாய்) மைத்திரி யாழ். வந்து நடத்திய கூட்டத்தில் பங்கு பற்றினீர்களா? அக் கூட்டம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சுரேஷ்: ஆம் அதில் கலந்து கொண்டேன். இன்று வட மாகாண அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது. அதில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண் டார். அந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் உரையாற்றியபோது, 13-ம் திருத்த சட்டம் குறித்தும், இரண்டு தேசம் ஒரு நாடு என்று இருக்க வேண்டுமெனில் அதிகார பகிர்வு அவசியம் என்று கூறினார்.

கேள்வி: மைத்திரி வருகையால் யாழில் மாற்றம் ஏற்படுமா?

சுரேஷ்: வடமாகாண சபைக்குப் பெரும் நிதித் தேவை இருப்பதாக கோரிக்கை வைத்தார்கள். அவை உடனடியாகச் சாத் தியப்படும் என்று நான் சொல்லமாட்டேன் ஏனெனில், தற்போதைய நிலையில் 100 நாளின்பின் பாராளுமன்றத் தேர்தலுக்கு போகவேண்டும் என்ற நிலை இருக்கிறது. தேர்தலுக்காக அவர்கள் யாழ் வருவார் கள். எதிர்வரும் 14-ம் திகதி இந்திய பிரதமர் யாழ். வர இருக்கிறார். அதற்குள் தாம் அனைவரையும் மீள் குடியேற்றம் செய்யப் போகிறோம் என்று அண்மையில் கூறினார். 1200 ஏக்கரில் மீள் குடியேற்றம் என்றார். சர்வதேசத்திற்கும் அதனைக் காட்டவேண்டிய தேவை இருக்கிறது. முன்னைய அரசு போல் இல்லை, நாம் சிலவற்றைச் செய்கிறோம் என்றும் காட்டவேண்டி இருக்கிறது. ஆகவே அந்த அடிப்படையில் கொழும்பில் இருந்து முக் கியமான அமைச்சர்கள் வந்து கதைத் தார்கள். ஆனாலும், அது உண்மையான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையா டலாக இருக்கவில்லை.

கேள்வி: சிறிலங்கா ஜனாதிபதியின் பேச் சில், தமிழ் மக்களின் காணி தொடர்பா கவோ? மீள்குடியேற்றம் குறித்தோ எதாவது பேசப்பட்டதா?

சுரேஷ்: நான் முன்பு குறிப்பிட்டது போல், நாம் 1200 ஏக்கரில் மீள் குடியேற்றத்தை ஆரம்பிக்கிறோம், செய்கிறார்களா என் பது வேறுவிடயம். சிவில் கவர்னரை மாற்றி இருக்கிறோம், பொது செயலாளரை நியமித்திருக்கிறோம், முன்னைய அரச காலத்தில் தான் மீள்குடியேற்றம் குறித்து பேசியதாகவும், தான் ஆட்சிக்கு வந்ததும், அதை செய்வதாகவும் சொன்னார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*