இப்போதும் ஜேசுநாதர்களே சிலுவையில் அறையப்படுகின்றார்கள்!

பிறப்பு : - இறப்பு :

தமிழீழ அரசியற் களம் தற்போது, தமிழீழ மக்க ளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலையும், அதிர்ச்சியை யும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. தமிழ் மக்களது நம்பிக்கையை சிதறடிப்பது போல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிதறும் நிலையை எட்டியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, கடும்போக்குத் தேசிய வாதிகள் ஓரங்கட்டப்பட்டபோது, அதிலிருந்து வெளி யேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை யில் ஒரு மாற்று அணி உருவாகியபோதும், விடுத லைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அரசியல் தளம் என்ற காரணத்தாலும், தமிழ் மக்கள் தமது பலத்தைச் சிதறடிக்க விரும்பாத காரணத்தாலும், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பே தனிப் பலமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தமிழ் மக்களது விருப்பங்களும், எதிர் பார்ப்புக்களும் அதி உச்ச ஏமாற்றங்களை அவர்க ளுக்கு வழங்கி வருகின்றது. மக்களது கோபங்களும், தீர்மானங்களும் உண் மையிலே, கடந்த மாகாணசபைத் தேர்தலில் வெளிப் பட்டிருக்க வேண்டும். ஆனாலும், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக நிறுத் திய காரணத்தாலும், அனந்தி போன்ற இறுக்கமான தேசியச் சிந்தனையாளர்கள் களத்தில் இறக்கப்பட்ட காரணத்தாலும், அது தேசியம் நோக்கிய திசை திருப்பலுடன் ஆற்றுப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில், அதன் தலைவர் ரணிலுடன் இணைந்து சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்திருந்தார்.

அதன் பின்னரான காலப் பகுதியிலும், சம்பந்தன் தமிழ் மக்களது உயிர்த் துடிப்பான தேசியத் தலைவர் அவர்கள்மீதான குற்றச்சாட்டுக்களை இரு வேறு சந்தர்ப்பங்களின் முன்வைத்து, சிங்கள இனவாதிக ளிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னரான சிறிலங்காவுக்கான ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களது ஆழ்மனக் கோபத்தைக் கிளறி, அதனை வாக்குக்களாக்கி மைத்திரியை வெல்ல வைக்கும் சூத்திரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரங்கேற்றியது. ‘ஆள் மாறினால் போதும்’ என்ற இந்தியா உட்பட்ட மேற்குலகின் விருப்பங்களை நிறைவேற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ மக்களது எதிர்பார்ப்புக்களைத் தட்டிப் பறித்து எதுவுமே இல்லாத நிலைக்கு அவர்க ளைத் தாழ்த்தியது.

இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் முடியவில்லை. சம்பந்தனும், சுமந்திரனும் இணைந்து இன்னொரு குத்துக்கரணத்தை அரங்கேற்றி, தமிழீழ மக்களை மட்டுமல்ல, புலம் பெயர் தமிழர்களது இரத்தத்தையும் சூடேற்றினார்கள்.

இவர்கள் இருவரது குத்துக்கரணங்களும் களத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்வினைகளைக் கருத்தில் கொண்ட, வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் ‘இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பே’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை ஏகமனதாக நிறைவேற்றி, தமிழ் மக்களுக்கான நீதிக்காக அறை கூவல் விடுத்தார்.

இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எதிர், எதிரான இரண்டு அரசியல் மையங்களை அடை யாளப்படுத்தியது. முதல்வர் விக்னேஸ்வரன் தலை மையிலான தேசியம் சார்ந்த தளம் ஒன்றும், சுமந் திரன் தலைமையிலான சம்பந்தரை உள்ளடக்கிய வர்த்தக அரசியல் தளம் ஒன்றுமாக முரண்பட்ட நிலை தமிழ் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியது.

தமிழ் மக்கள் மத்தியில் உருவாகிய சம்பந்தர், சுமந்திரன் மீதான வெறுப்பின் உச்சம், 21 பெப்ரவரி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் கொடும் பாவியை எரிக்கும் நிலையை ஏற்படுத்தியது. காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி நடாத் தப்பட்ட ஊர்வலத்தின் இறுதியில் சம்பந்தன், சுமந்திர னுக்கெதிரான முழக்கங்களுடன் சுமந்திரனது கொடும் பாவிக்குத் தீ மூட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லண்டனிலும், பாரிசிலும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது உருவப் படங்கள் தீயிடப்பட்டன. இவை அனைத்தும், தேசிய எழுச்சி களின் உச்சத்தையே அடையாளப்படுத்தின.
இதனை, வால்களின் போராட்டமாகச் சுமந்திரன் சித்தரித்தது, அவரை ஒட்டு மொத்த தமிழ்த் தேசிய மும் கோபம் கொள்ளும் நிலையை உருவாக்கியது. இனிவரும் காலத்தில், சுமந்திரனையோ, சம்பந்த னையோ புலம்பெயர் தமிழ்த் தேசியம் வரவேற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சுமந்திரன், துரையப்பா வின் தகுதியைப் பெற்றுவிட்டார் என்றே புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் கருதுகின்றார்கள்.

இந்த நிலையில், வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்னொரு நகர்வை மேற் கொண்டது. சம்பிரதாயபூர்வமான சில கோரிக்கை களை நிறைவேற்றிய இந்த மத்திய குழு, அனந்தியை யும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் குறி வைத்தது.தற்போது, தமிழ்த் தேசிய தளத்தில் உருவாகியுள்ள கோபத்திற்கும், கெந்தளிப்பிற்கும் அடிப் படைக் காரணங்களை அலச வேண்டிய தருணத்தில், அதன் பின்னரான எதிர்வினைகள் பற்றியே கவனம் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எந்த முடிவுகளோ, அனுமதியோ பெறப்படாமல், 43 வருட காலமாகத் தமிழ் மக்கள் கடைப்பிடித்து வந்த சிங்கள தேசத்தின் சுதந்திரநாள் நிராகரிப்பை, தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகர்த் தெறிந்தது குறித்து, அவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படாத நிலையில், சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிய அன்ரனி ஜெகநாதனைக் கண்டிக்காத நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அனந்தி மீதும், சுரேஷ் பிரேமச்சந்திரன்மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானம் இயற்றியுள்ளது.

சத்தியத்தைப் போதித்த யேசுநாதர்கள் இப்போ தும் சிலுவையில் அறையப்படுகின்றார்கள். சாத்வீகத் தைப் போதித்த காந்திகள் இப்போதும் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள்.தந்தை செல்வா இப்போது உயிருடன் இருந்திருந் தால், தான் உருவாக்கிய தமிழரசுக் கட்சியை தீயிட்டுப் பொசுக்கியிருப்பார்.

– ஈழநாடு –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit