நிதி மந்திரி தனது பதிலுரையிலாவது வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நிதிமந்திரி தனது பதிலுரையிலாவது வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருமான வரி விலக்கு

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பரவலாக பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்பதில் அய்யமில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டிலும் கூட இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு மிக அதிக அளவில் உயருமென்று எதிர்பார்த்து, இறுதியில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே, அதாவது 2 லட்சம் ரூபாய் என்பது 2லு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

அந்த 2லு லட்சம் ரூபாய் தற்போது 3லு லட்சம் ரூபாயாகவாவது உயருமென்று நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏடுகளும் எழுதின. எனினும் நிதி மந்திரி தனது பதிலுரையிலாவது மக்களின் ஏமாற்றத்தை ஓரளவுக்கேனும் போக்கிடும் வகையில் தனது முடிவினை மறுபரிசீலனை செய்து அறிவிப்பார் என்று நம்புகிறேன். அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்

வேளாண் வருவாய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற இந்த எட்டு மாதங்களில் இதற்கான அறிகுறி எதுவும் தென்படாத நிலையில், நெருக்கடியில் சிக் குண்டிருக்கும் இந்திய விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றுதான்.

கல்வித்துறையைப் பொறுத்தவரை இந்தி மயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் போன்ற குறுகிய அணுகுமுறைகளை கைவிட்டு, இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமமான பங்களிப்பை அனுமதித்து கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு மேற்கொள்ளுமானால் அனைவரும் அதனை வரவேற்கவே செய்வார்கள்.

2020-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்பது நல்ல லட்சியம். இது வெறும் காகித லட்சியமாக இல்லாமல், நெடுங்காலமாக ம த்திய அரசால் எடுத்துரைக்கப்படும் கொள்கை அறிவிப்பாக இருந்து வருவதால், அதனை இனியாவது நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுத்து முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.

வரவேற்கப்படவேண்டிய திட்டம்

வளர்ச்சிக்கும், முதலீட்டுக்குமான நிதிநிலை அறிக்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் கதவுகளைத் தாராளமாகத்திறந்து விடும் மனப்பான்மையை ஓர் எல்லைக்கோட்டுக்குள் நிறுத்திக்கொண்டு, ஆரோக்கியமான முதலீட்டுக்கும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மட்டுமே வழி காண வேண்டும்.

மின்சாரத்தின் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில் தலா நான்காயிரம் மெகாவாட் திறன்கொண்ட 5 மின் உற்பத்தித்திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தேவையை நிறைவு செய்வதாக இல்லை.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டிற்காக புதிதாக “முத்ரா” வங்கித்திட்டம், சிறுபான்மைப் பிரிவு இளைஞர்கள் நலனுக்காக “நயிமன்சில்” திட்டம், சுற்றுலா தலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கும் திட்டம், அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்துப்படியை இரட்டிப்பாக உயர்த்துதல், குழந்தைகள் மேம்பாட்டுக்கு 1,500 கோடி ரூபாயில் புதிய திட்டம் போன்றவை வரவேற்கப்பட வேண்டிய திட்டங்களாகும்.

மகிழ்ச்சி

எனினும், அந்தத் திட்டங்கள் எந்த அளவுக்கு ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தப்படப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஐந்து மாநிலங்களில் “எய்ம்ஸ்” மருத்துவமனை அறிவிக்கப்பட்டிருப்பதில், தமிழ்நாடும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*