காஷ்மீர் மந்திரி சபை பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்கிறா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காஷ்மீர் மந்திரி சபை பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

உடன்பாடு

காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவிர, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற மக்கள் ஜனநாயக கட்சியும், 25 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜனதாவும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன.

சிலநாட்களுக்கு முன்பு மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா டெல்லியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது.

நாளை பதவி ஏற்பு

இந்த நிலையில் இரு கட்சிகளிடையேயும், ஆட்சியமைக்கும்போது, குறைந்தபட்ச செயல் திட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.

அமித்ஷா, மெகபூபா பேச்சுவார்த்தைக்கு பின்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுதல், பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான பிரச்சினைகளிலும் இணக்கமான உடன்பாடு உண்டானது.

மாநில முதல்-மந்திரியாக முப்தி முகமது சயீது பதவி ஏற்பது எனவும், துணை முதல்-மந்திரி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

மேலும், பதவி ஏற்பு விழாவை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிரதமருடன் சந்திப்பு

இந்த நிலையில் பிரதமர் மோடியை டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவருடைய அலுவல்பூர்வ இல்லத்தில் மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனர் சயீது நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

அப்போது பிரதமர் மோடியை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சயீது அழைப்பு விடுத்தார்.

ஏற்றுக்கொண்டார்

இதுபற்றி முப்தி முகமது சயீது நிருபர்களிடம் கூறும்போது “மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா கூட்டணி மந்திரி சபையின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்” என்றார்.

அப்போது, பிரச்சினைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவு ஆகியவை குறித்து பிரதமருடன் பேசினீர்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சயீது, கூறியதாவது:-

நாளை அறிவிக்கப்படும்

370-வது சட்டப்பிரிவு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுதல் போன்றவைகளை விட்டுத் தள்ளுங்கள். இவையெல்லாம் பிரச்சினைகளே அல்ல. இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை (நாளை) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

வெளிப் பிரச்சினையைப் பொறுத்தவரை(பாகிஸ்தானுடன் உறவு) முந்தைய பிரதமர் வாஜ்பாயின் கொள்கை நிலைப்பாடு தொடரப்படவேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்-மந்திரி

மக்கள் ஜனநாயக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சேருமா? என்ற மற்றொரு கேள்விக்கு சயீது பதில் அளிக்கையில், இதுபற்றி முன்கூட்டியே பதில் கூறுவது பொருத்தமாக இருக்காது. இதை எங்களது மந்திரிகள் விரைவில் முடிவு செய்வார்கள் என்றார்.

நாளை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி முப்தி முகமது சயீதுடன் சில மந்திரிகளும் பதவி ஏற்கின்றனர்.

பா.ஜனதாவின் சார்பில் நிர்மல் சிங் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் பங்குபெறுவது இதுவே முதல் முறையாகும்.

முப்தி முகமது சயீது பதவி ஏற்கும் விழா ஸ்ரீநகரில் உள்ள ஜெனரல் ஷோரவார் சிங் கலையரங்கில் நடக்கிறது. அவருக்கும், மந்திரிகளுக்கும் மாநில கவர்னர் என்.என். வோரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு…

முப்தி முகமது சயீது 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவி வகித்து உள்ளார்.

1989-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கின் மந்திரி சபையிலும் சயீது பதவி வகித்து உள்ளார்.

10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது முப்தி முகமது சயீது மீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*