ஆசை…!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Kannadasan

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்’ என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருப்பது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.

-கவிஞர் கண்ணதாசன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit