எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியா – சீனா நெகிழ்வு தன்மை காட்ட வேண்டும்’

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியா – சீனா நெகிழ்வு தன்மையை காட்ட வேண்டியது’ தேவை உள்ளது என்று சீன அரசு நாளிதழ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே மாதம் சீனா வருவதற்கு முன்னதாக, எல்லை பிரச்சனையை தீர்க்கும் விவகாரத்தில் இந்தியா “சாதகமான அணுகுமுறை”யை எடுக்க வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீன அரசு நாளிதழில் வெளியான கட்டுரையில், எல்லை விவகாரத்தில் குறிப்பாக அருணாசலப் பிரதேசம் விவகாரத்தில் உள்ள பிரச்சனையில் உடன்பாட்டை எட்ட “வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் புதுமையான அணுகுமுறை”யை நிரூபித்து காட்ட வேண்டிய தேவை இந்தியா மற்றும் சீனாவிற்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கட்டுரை சீன அரசு நாளிதழ் குலோபள் டைம்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு விவகார நிபுணர் லேன் ஜியான்ஷிக், இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சீனா வந்தபோதே எல்லை விவகாரம் அடுத்த சந்ததியினருக்கும் விட்டு செல்லப்படக்கூடாது என்பது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. “எல்லை விவகாரத்தை நேர்மையுடன் தீர்த்துக் கொள்வதில் சீனா எப்போதுமே உடன்பட்டுள்ளது, இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சீன அரசு எப்போதும் தனது திட்டங்களை வழங்கி வருகிறது. இரு தரப்பும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அது கோருகிறது. அவை அனைத்தும் இந்தியாவால் மறுக்கப்படுகிறது.

“எனவே, நாங்கள் இணைந்து செல்படுவதில் யோசனையுடன் முன்னோக்கி வந்துள்ளோம், ஒரே திசையை நோக்கி செல்கிறோம், எனென்றால் சீனாவுடன், இந்தியா தொடர்ந்து வேகத்தை கொண்டிருக்காது என்று நாங்கள் உணர்கிறோம். பரஸ்பர புரிதல், தங்குமிடம் ஆகியவை அடிப்படையில் மட்டும் இருதரப்பு இடையே ஒருமித்த உடன்பாடு ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம். எல்லை விவகாரத்தை தீர்ப்பதில் இருதரப்பும் வளைந்து கொடுக்கும் தன்மையில் வலிமையை காட்டவேண்டும். அதனுடன் விரைவில் புதிய அணுமுறையும் காட்டப்படவேண்டும்,” என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா இடையே எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியான அஜித் தோவால், சீன சிறப்புப் பிரநிதியான யாங் ஜிய்ஷி இடையில் 18-வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் சீன அரசு நாளிதழில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, கடந்த 2003-ம் ஆண்டு சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதுவரை 17 சுற்றுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*