173 இந்திய சிறைக்கைதிகளை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

psaak

பாகிஸ்தான் சிறையில் வாடும் 173 இந்தியர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 173 இந்திய கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்து இருப்பதாக அந்நாட்டு அரசு எழுத்துப்பூர்வமாக இந்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளது என்று வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் தெரிவித்துள்ளார்.

மேலும், ”இவர்கள் பிப்ரவரி 16 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என்றும் வாகா எல்லை வழியாக வந்து சேரும் அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்பார்கள் எனவும் சையது அக்பரூதின் தெரிவித்தார்.இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கணக்கின் படி 50 பொதுமக்கள் உட்பட 526 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit