பிரதமர் மோடிக்கு கோவில் கட்டும் ஆதரவாளர்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் அவருக்கு ராஜ்கோட்டில் கோவில் கட்டி வருகின்றனர். கோர்தரியா சாலையில் உள்ள இந்த கோவிலில் மோடியின் மார்பளவு சிலை கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் கட்டும் பணிகள் நிறைவுற்று வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. ஓம் யுவா என்ற குழு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் சிறிய அளவில் நன்கொடைகள் பெற்று இந்த கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ஓம் யுவா குழுவின் தலைவர் ஜெயேஷ் படேல் கூறுகையில், வாழும் மனிதர்க்கு கோவில் கட்டுவது குஜராத்தில் இதுதான் முதல் முறை ஆகும். ராஜ்கோட்டில் முதல் முறையாக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே மோடியை எங்கள் தொண்டர்கள் கடவுளாக வழிபட ஆரம்பித்து விட்டனர். அவர் முதல் மந்திரியாக இருந்த அவர் செய்த பணிகளாலும் தற்போது பிரதமரான பின் அவர் மேற்கொண்டு வரும் செயல்களாலும் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டோம். எனவே அவருக்கு கோவில் கட்டுவதென்று முடிவு செய்து வேலையை தொடங்கிவுள்ளோம்” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*