டெல்லி தேர்தலில் ஜனாதிபதியின் மகள் உள்பட 63 காங். வேட்பாளர்களின் டெபாசிட் பறிபோனது
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை கூட கைப்பற்றாத நிலையில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட 70 வேட்பாளர்களில் 63 பேர் தங்களது டெபாசிட்டையும் இழந்துள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், டெல்லி தேர்தலின் பிரதான வேட்பாளரும், இந்த தேர்தலுக்கான காங்கிரஸ் பொறுப்பாளருமான அஜய் மக்கான், சதார் பஜார் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சோம் தத்திடம் அவர் டெபாசிட்டை இழந்தார்.
இதேபோல், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜியின் டெபாசிட்டும் பறிபோனது.
புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 57,213 வாக்குகளை வாங்கி, 31 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல் மந்திரி கிரண் வாலியாவும் டெபாசிட்டை பறி கொடுத்தார். இதேபோல் காங்கிரசை சேர்ந்த மொத்தம் 63 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட்டை இழந்துள்ளனர்.
அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் யாரும் டெபாசிட் பறிபோகும் அளவுக்கு மோசமான தோல்வியை சந்திக்கவில்லை. பா.ஜ.க. வேட்பாளர்களில் மூன்று பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.