டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

பிறப்பு : - இறப்பு :

டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைதேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கவுள்ளார்.

முதல் மந்திரியாக பதவியேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரி) தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் 12 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சிறப்பு கமிஷனர் (பாதுகாப்பு) எஸ்.பி.கே சிங் கூறியதாவது:- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கெஜ்ரிவால் எங்கு சென்றாலும் ஒரு பைலட் கார் மற்றும் அதை பின் தொடர்ந்து இருகார்களில் கெஜ்ரிவாலுடன் பாதுகாப்பு படையினரும் உடன் செல்வார்கள்” என்று தெரிவித்தார்.

கடந்த முறை அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநில போலீசார் தாமாக முன்வந்து அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது நினைவுகூரத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit