இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 4% உயர்வு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 4% உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. அதன்வழியாக, அன்னிய செலாவணி வருவாயும் 4 சதவீதம் உயர்ந்து ரூ.11,529 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக, அமெரிக்காவில் இருந்து 16.35 சதவீதமும், லண்டனில் இருந்து 11.82 சதவீதமும், வங்காளதேசத்தில் இருந்து 9.29 சதவீதமும், கனடாவிலிருந்து 4.70 சதவீதமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

குறைந்தபட்சமாக, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளிலிருந்து 3.12 சதவீத சுற்றுலா பயணிகளும், இலங்கை, மலேசியா, ஜப்பான், சீனா, கொரியா நாடுகளிலிருந்து 3 சதவீத சுற்றுலா பயணிகளும் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

இந்தியாவில் புதுடெல்லி, மும்பை, சென்னை நகரங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிகின்றனர். அதற்கடுத்தபடியாக, கோவா, பெங்களூரு, ஹரிதாஸ்பூர், கொல்கத்தா, கொச்சி, அஹமதாபாத், ஐதராபாத் நகரங்களை பெரும்பாலும் பார்வையிடுகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit