கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம்மாற்றம் செய்வது அத்தியாவசியம் ஐகோர்ட்டு தீர்ப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சட்டக்கல்லூரியை இடம் மாற்றம் செய்வது அத்தியாவசியமானது ஆகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கட்டிடம் விரிசல்

சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவன் சித்திக் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம், மெட்ரோ ரெயில் பணியினால் சேதமடைந்துள்ளது என்று கூறி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து, போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் விதிமுறை மீறி தடியடி நடத்தியுள்ளனர். எனவே, கல்லூரியை இடம்மாற்ற தடை விதிக்கவேண்டும். தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

நிபுணர்கள் குழு அறிக்கை

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆரோக்கியதாஸ் ஆஜராகி வாதிட்டார். அவற்றின் விவரம்:-

வக்கீல்:- சட்டக்கல்லூரி இடம்மாற்றம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டு வக்கீல் ராகவாச்சாரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.

நீதிபதிகள்:- கல்லூரி கட்டிடம் குறித்து பொது விசாரணைக்கு எல்லாம் உத்தரவிட முடியாது. 125 ஆண்டு பழமைவாய்ந்த சட்டக்கல்லூரி கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும், அந்த கட்டிடத்தை கல்லூரியாக பயன்படுத்த முடியாது என்றும் 2 நிபுணர் குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று வழக்கு தொடருவார்கள்.

ஆட்சேபனை இல்லை

வக்கீல்:- தற்காலிகமாக கல்லூரியை இடம்மாற்றம் செய்வதற்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், கட்டிடம் சரிசெய்த பின்னர், மீண்டும் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படும் என்று அரசு எந்த ஒரு உத்தரவாதத்தையும் தர மறுக்கிறது.

நீதிபதிகள்:- உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது. தற்போது கட்டிடம் உடனடியாக சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதனால், கல்லூரி இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த கல்லூரியை இடம் மாற்றுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது. சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. சென்னையில் இருப்பதுபோல, உலகில் எந்த ஒரு இடத்திலும் நீதிமன்ற வளாகத்தில் சட்டக்கல்லூரி இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தள்ளுபடி

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கல்லூரியை இடம் மாற்றம் செய்யவேண்டும் என்று தமிழக அரசு முடிவு எடுத்த பின்னர், மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்லூரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். கல்லூரியை இடம் மாற்றினால், அவர்களுக்கு பாதிப்பு வரும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. கல்லூரியை இடம் மாற்றுவதால், மாணவர்களின் படிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

கல்லூரி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்த பின்னர், மீண்டும் கல்லூரி பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சூழ்நிலையில் ஏற்கமுடியாது. கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கல்லூரியை இடம்மாற்றம் செய்வது என்று அத்தியாவசியமானது ஆகும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*