தனித்து ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி; பாஜகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்குமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப் பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில் பாஜகவிற்கான வாக்குப் பெரும்பான்மை குறைவாக உள்ள காரணத்தினால் பாஜகவுக்கு அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் “மோடி” அலை என்ற பெயரில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது பாஜக.

காங்கிரஸ் கட்சியோ வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்று, எதிர்கட்சி அந்தஸ்த்தையும் இழந்து தனித்து விடப்பட்டது. நாடாளுமன்ற அவையில் எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்க வேண்டுமெனில் பத்து சதவீத இடங்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதாவது குறைந்தது 54 உறுப்பினர்களாவது இடம்பெற்றிருக்கவேண்டும். அதனால் காங்கிரஸுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடையாது என்று கூறி ஒட்டுமொத்தமாக மறுத்துவிட்டது பாஜக.

44 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் கட்சி இந்திய வரலாற்றில் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்துகூட பெறாமல் செல்வாக்கு இழந்துள்ளது என்றெல்லாம் ஏளனக் கூக்குரல்கள் பாஜகவின் தரப்பில் இருந்து வெளியாகின.

இந்நிலையில், தோசையை அப்படியே திருப்பிப் போடும் வகையில் மோடி அலையாவது ஒன்றாவது என்று பாஜகவையே தூக்கிச் சாப்பிட்டுள்ளது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.

வெறும் 5 இடங்களை மட்டுமே பாஜகவிற்கு விட்டுக் கொடுத்து விட்டு வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைத்து ஜெயித்துள்ளது ஆம் ஆத்மி.

அன்று லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் நின்ற மதிலின் மேல்தான் இன்று தலைநகரத்தின் தேர்தல் முடிவுகளில் நிற்கின்றது பாஜக.

தனிப்பெரும்பான்மையுடன் எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெறுவதற்கான இடங்களைக் கூட பெறாமல் டெல்லியில் நீர்த்துப் போயிருக்கின்றது மோடி அலை.

தனிப்பெரும்பான்மையுடன் எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெறுவதற்கான இடங்களைக் கூட பெறாமல் டெல்லியில் நீர்த்துப் போயிருக்கின்றது மோடி அலை.

தனித்து ஆட்சி அமைக்கின்ற ஆம் ஆத்மி கட்சியானது, பாஜகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தினை தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கெஜ்ரிவாலாய்ப் பார்த்து வழங்கினால்தான் உண்டு. இல்லையெனில் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி புரியும் கட்சி தலைநகர சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக கூட இல்லை என்ற அவல நிலைக்கு பாஜக தள்ளப்படும்.

இந்த காரணத்தால்தான், தனக்கு ஒரு கண் போனாலும் கூட பக்கத்தில் இருப்பவனுக்கு இரண்டு கண்ணும் போன கதையாக பாஜகவின் நிலைமையைப் பார்த்து மன ஆறுதல் பட்டுக் கொள்கின்றது காங்கிரஸ்.

மொத்ததில் பாஜக எதிர்கட்சியா?, எதுவும் இல்லாத கட்சியா? பாஜகவின் தலையெழுத்து தலைநகரைப் பொறுத்த வரையில் ஆம் ஆத்மி கையில்தான்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*