பாதுகாப்புக் காரணங்களால் நைஜீரியாவில் தள்ளிப் போடப் பட்டது தேர்தல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எதிர் வரும் சனிக்கிழமை நைஜீரியாவில் நடைபெறவிருந்த தேர்தல் பாதுகாப்புக் காரணங்களால் மார்ச் 28 ஆம் திகதி பின் தள்ளிப் போடப் பட்டிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று சனிக்கிழமை அறிவித்திருந்தது.

கடந்த சில வாரங்களாக நைஜீரியக் குடிமக்கள் மற்றும் இராணுவத்தினர் மீது போக்கோ ஹராம் போராளிக் குழுவினர் தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலே இந்நடவடிக்கைக்குக் காரணம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இத்தகவல் சுதந்திரமான தேசிய தேர்தல் ஆணையத்தின் சேர்மேன் அட்டாஹிரு ஜெகாவினால் டுவிட்டரில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. நைஜீரியாவில் அடுத்த கிழமை நடைபெறத் திட்டமிடப் பட்டிருந்த தேர்தலில் பொதுமக்கள் ஜனநாயக் கட்சியின் உறுப்பினரும் தற்போதைய அதிபருமான குட்லுக் ஜொனாதன் மறுபடி போட்டியிடுகின்றார். இவர் மீது போக்கோ ஹாராம் மீதான போரில் போதிய பங்களிப்பு நல்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப் பட்டிருப்பதால் தேர்தலில் இவர் கடும் போட்டியை எதிர்கொள்ளலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.

ஏற்கனவே இக்காரணத்தினால் ஜனவரியில் வடகிழக்கு நைஜீரியாவுக்கு இவர் விஜயம் செய்திருந்த போது இவரது கார் மீது பொதுமக்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேர்தலின் குறித்த பின் தள்ளிப் போடலானது நைஜீரியாவின் ஜனநாயகத்துக்குப் பாரிய பின்னடைவு என அனைத்துக் கட்சியினரும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெனின், கமெரூன், நைகர், நைஜீரியா மற்றும் சாட் ஆகிய நாடுகள் போக்கோ ஹராமை எதிர்த்துப் போராடுவதற்காக மேலதிக 8700 துருப்புக்களை அனுப்புவது என முடிவெடுத்துள்ள அதே நாளில் தான் தேர்தலை ஒத்திப் போடுவது என்ற அறிவிப்பும் விடுவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு முதல் நைஜீரியாவில் எழுச்சியடைந்து வரும் போக்கோ ஹராம் அங்கு போலிசார், பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றது. மேலும் அரச கட்டடங்களைக் குறி வைத்து குண்டுத் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது. இதன் நோக்கமாக ஷரியா சட்டப் படி அமைந்த ஆட்சியை நைஜீரியா முழுதும் நிறுவுவது என்பது அமைந்துள்ளது. சமீப காலமாக நைஜீரியா மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான கமெரூன் மற்றும் சாட் மீதும் போக்கோ ஹராமின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*