காமெடி நடிகர் செல்லத்துரை உடல்நலக்கோளாறால் மரணம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காமெடி நடிகர் செல்லத்துரை சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. மறைந்த செல்லத்துரைக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். நடிகர் செல்லத்துரை ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். பிரபா ஒயின்ஸ்ஷாப் ஓனர் வடிவேலு நடித்த காமெடிகளில் பிரபலமானது ‘பிரபா ஒயின் ஷாப் ஓனர்’ காமெடி. ஒயின்ஷாப்புக்குள் மாட்டிக்கொள்ளும் வடிவேலு வீட்டில் மனைவியுடன் ஜாலியாக இருக்கும் ஓனர் செல்லத்துரைக்கு போன் போட்டு பண்ணும் டார்ச்சர் இன்றைக்கும் டிவிக்களில் பிரபலம்.

தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் செல்லத்துரை நடித்துள்ளார். சிறுநீரகக் கோளாறு கடந்த சில மதங்களாக, சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த செல்லதுரை 3 நாட்களுக்கு முன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு வடபழனி சுடுகாட்டில் நடைபெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*