பக்தாத்தில் ஒரு தசாப்த காலமாக அமுலில் இருந்த இரவு நேர ஊரடங்கு நீக்கம்!:

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

003 ஆம் ஆண்டு ஈராக்கை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்ட போது பக்தாத்தில் அமுலுக்குக் கொண்டு வந்திருந்த இரவு நேர ஊரடங்கு சட்டத்தை நீக்குவது என கடந்த வியாழக்கிழமை ஈராக் அரசு முடிவெடுத்திருந்தது.

சமீப நாட்களாக ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் பக்தாத் நகரின் மீள் எழுச்சிக்கான இன்னொரு சிறிய மைல்கள் இம்முடிவு எனக் கருதப் பட்டது.

மேலும் ஈராக் பிரதமர் ஹைடெர் அல் அபாடி இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் குறித்த ஊரடங்கு நீக்கப் படும் எனவு அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு விடுவிக்கப் பட சில மணி நேரங்களுக்கு முன்பு தான் பக்தாத்தை சுற்றி இடம்பெற்ற 3 குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 34 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் மேலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலாவது தாக்குதலானது நியூ பக்தாத்தின் ஷைட்டி முஸ்லிம்களின் உணவு விடுதிக்குள் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது அங்கியில் பொருத்தப் பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் மேற்கொள்ளப் பட்டது. இதில் 22 பேர் கொல்லப் பட்டனர்.

2 ஆவது தாக்குதல் ஷர்க்கா மார்க்கெட் பகுதியில் இரு குண்டுகள் வெடிக்க வைக்கப் பட்டதன் மூலம் நிகழ்த்தப் பட்டது. இதில் 10 பேர் கொல்லப் பட்டனர். 3 ஆவது தாக்குதல் பக்தாத்தின் டுரா சுற்றுப் புறத்தில் ஷைட்டிக்களின் அபு செயிர் கட்டடத்தின் வெடிக்க வைக்கப் பட்டது. இதன் போது இருவர் கொல்லப் பட்டும் 7 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். இக்குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஈராக் உள்துறை அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனெரல் சாட் மான் தெரிவிக்கையில் ஊரடங்குச் சட்டம் நீக்கப் பட்டதற்கும் இத்தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தான் நம்பவில்லை என்றுள்ளார்.

மறுபுறம் நைஜீரியாவில் சமீபத்தில் நடைபெறவிருந்த அதிபர் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் போக்கோ ஹராம் போராளிகள் மீது திட்டமிடப் பட்டுள்ள பாரிய தாக்குதல் முன்னெடுப்புக்களால் பின் தள்ளிப் போடப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*