உக்ரைனில் சமாதானம் நிச்சயமற்றது!:ஆனால் முயற்சிப்பது முக்கியமானது!:ஏஞ்சலா மேர்கெல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சனிக்கிழமை ஜேர்மன் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் ஊடகப் பேட்டியின் போது, ரஷ்ய அதிபர் புட்டினுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் உக்ரைனில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமற்றவையாக இருப்பதாகவும் ஆனால் அதற்காக முயற்சிப்பது மிக முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டே மற்றும் ஜேர்மனின் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் ஆகியோர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்து உக்ரைன் விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடி இருந்தனர். இதன் பின்னர் சனிக்கிழமை மூனிச் நகரில் வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில் ஏஞ்சலா மேர்கெல் உரையாற்றும் போதே அதிபர் புட்டினிடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தது என உறுதியாகச் சொல்ல முடியாது எனவும் ஆனால் இதற்கான முயற்சிகளைக் கைவிட முடியாது என்றும் ஐரோப்பாவில் உள்ள எல்லைகள் மீற முடியாதவை என்றும் தெரிவித்திருந்தார்.

தமது பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யா சமாதானம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு தொடர்பில் அவமரியாதையை வெளிப்படுத்தியதாகவும், அதிகாரத்தைப் பிரயோகித்து எல்லைகளை மாற்றுவது என்பதானது சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒன்று எனவும் மேர்க்கெல் குறிப்பிட்டார். இந்நிலையில் சனிக்கிழமை காலை வரை மாஸ்கோவில் சமாதான பேச்சுவார்த்தைகள் நீடித்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை முத்தரப்பும் இணைந்து தொலைபேசி வயிலாகவும் இதனை நீட்டிக்கவுள்ளதாகவும் மாஸ்கோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவுடன் பாதுகாப்பை இணைந்து வளர்த்துக் கொள்ளவே நாம் விரும்புகின்றோம் எனவும் அதற்கு எதிராக அல்ல எனவும் மேர்க்கெல் தெளிவு படுத்தியிருந்தார். மறுபுறம், ரஷ்ய அதிபர் புட்டின் பல தடவைகள் சமாதானத்தை ஏற்படுத்துவோம் என வாக்களித்து விட்டு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு டேங்கிகள், படைகள் மற்றும் ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார் என அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடென் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*