14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு இம்முறை சிங்கப்பூரில்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

14 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500 க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தரவுள்ளனர்.

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்´ என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும்
பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடாத்தி வருகிறது.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

மேலும் சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள், இணையம், கையடக்க தொலைபேசி கருவிகளில் தமிழின் பயன்பாடு தொடர்பாக சிறப்பு கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*