ஐஸ்வர்யா ராய் ஆடிய பாடல் ரீமேக்கிற்கு சன்னி லியோன் குத்தாட்டம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடனமாடிய பழைய பாடல் ஒன்றிற்கு புதியதாக நடனமாடியுள்ளார் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன்.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் ஹம் தில் தே சுக்கே சனம். இந்த படத்தில் சல்மான்கான் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த இந்த திரைப்படம் பாலிவுட் படவுலகில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தோலி தரோ தோல் பாஜேஎன்று தொடங்கும் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் தற்போது கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்து வரும் ஏக் பகேலி லீலா என்ற படத்திற்காக ஒருசில மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடலின் படப்பிடிப்பு மிகவும் பிரமாண்டமாக சுமார் 500 நடனக்கலைஞர்களுடன் மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. பாபிகான் இயக்கி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*