புத்தகத்துக்குள் கைத்துப்பாக்கி கடை ஊழியர் அதிர்ச்சி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Puttakattukkul-shock-gun-store-employee

அமெரிக்காவின் மைனே மாநிலத்தின் எல்ஸ்வொர்த் பகுதியில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. மக்கள் பயன்படுத்திய பொருட்களை இந்த கடைக்கு தானமாக வழங்குவது உண்டு. சமீபத்தில் அவ்வாறு வழங்கப்பட்ட சில பொருட்களை கடை ஊழியர் அடுக்கிக்கொண்டு இருந்தார்.

அதில் ஒரு புத்தகம் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் அந்த புத்தகத்தை பிரித்து பார்த்தார். அப்போது புத்தகத்துக்குள் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. துப்பறியும் சினிமாக்களில் வருவது போல புத்தகத்தின் தாள்களை கவனமாக வெட்டி, அதனுள் துப்பாக்கி பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் அங்கு வந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த புத்தகம் ஒரு கிட்டங்கியில் இருந்து பல்வேறு நபர்களை கடந்து, இந்த கடைக்கு வந்துள்ளது. இதனால் துப்பாக்கியை வைத்தவர் யார்? என்பது கண்டுபிடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit