சிரியாவில் கிளர்ச்சி படையினர் பகுதியில் நடந்த ராக்கெட் வீச்சில் 82 பேர் சாவு 10 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிரியாவில் கிளர்ச்சி படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதியில், அதிபர் ஆதரவு விமானப்படையினர் நடத்திய ராக்கெட் வீச்சில் 82 பேர் பலியாகினர். டமாஸ்கஸ்சில் கிளர்ச்சி படையினர் நடத்திய ராக்கெட் வீச்சில் 10 பேர் கொல்லப்பட்டதற்கு இது பதிலடி ஆகும்.

உள்நாட்டு போர்

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் கிளர்ச்சி நடந்து வருகிறது. இதில், கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் ஆதரவு படையினருக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு சண்டைகளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. புள்ளி விவரம் கூறுகிறது.

அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிற இயக்கங்களில், ஒரு மதத்தின் பெயரால் அமைந்த படையும் அடங்கும். இந்த படை 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஜாரான் அல்லவுஷ் என்பவர் இருக்கிறார்.

கிளர்ச்சி படையினர் தாக்குதல்

இந்த கிளர்ச்சி படையினர், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்சில் மக்கள் குடியிருந்து வருகிற பகுதிகளை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட் வீச்சுக்களை நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி தர அதிபர் ஆதரவு படையினர் முடிவு செய்தனர்.

82 பேர் சாவு

இதையடுத்து, அந்த மதத்தின் பெயரால் அமைந்த கிளர்ச்சி படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற கிழக்கு கூத்தா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி, அதிபர் ஆதரவு விமானப்படையினர் தொடர்ந்து ராக்கெட்டுகளை வீசினர். இதில் 82 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 12 குழந்தைகளும் அடங்குவார்கள்.

இது தொடர்பாக சிரியாவில் வன்முறை சம்பவங்களை கண்காணித்து வருகிற சிரிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு நேற்று கருத்து தெரிவிக்கையில், “கிளர்ச்சி படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற கிழக்கு கூத்தா மாவட்டத்தில், விமானப்படையினர் தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தினர். வியாழக்கிழமை பகலில் தொடங்கிய தாக்குதல் இரவு விடிய, விடிய நீடித்தது. மொத்தம் 60 ராக்கெட்டுகள் வீசப்பட்டன” என்று கூறியது.

பதிலடி கொடுப்போம்

மேலும், “சிரியாவில் இப்படி வான்தாக்குதல்கள் நடத்துவது அபூர்வமான ஒன்று அல்ல என்ற போதிலும், மதத்தின் பெயரால் அமைந்த அந்த கிளர்ச்சி படையினர், மக்கள் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் வீச்சு நடத்தி 10 பேரை கொன்று குவித்ததற்கு, விமானப்படையின் பதிலடியாக இது அமைந்துள்ளது” என கூறியது.

இதற்கிடையே டமாஸ்கஸ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் வீச்சு நடத்தி 10 பேரை கொன்றது குறித்து அந்த கிளர்ச்சி படையின் தலைவர் ஜாரான் அல்லவுசுக்கு சொந்தமானது என கருதப்படுகிற ‘டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், “கிழக்கு கூத்தா மாவட்டத்தில் சிரியா படையினர் ஏற்கனவே நடத்திய தாக்குதல்கள் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை ருசிப்பதற்காகத்தான் நாங்கள் டமாஸ்கஸ்சில் ராக்கெட் வீச்சு நடத்தினோம். டமாஸ்கஸ் ராணுவ மண்டலமாகி விட்டது. டமாஸ்கஸ்சிலிருந்து வருகிற எந்தவொரு வான்தாக்குதலுக்கும் நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம்” என கூறப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*