அக்காவின் கவர்ச்சி வழியில் செல்லும் அக்ஷாரா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலக நாயகன் இரண்டவது மகள் அக்ஷாரா ஹாசன் நடித்த முதல் திரைப்படம் ‘ஷமிதாப்’ விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அக்ஷரா தன்னுடைய திரையுலக பாதை குறித்து ஒரு தெளிவான முடிவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆர்ட் பிலிம்ஸ் மற்றும் அவார்ட் வின்னிங் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும், முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களில் நாயகியாகத்தான் நடிக்க விரும்புவதாகவும், கதைக்கு தேவைப்பட்டால் பிகினி மற்றும் லிப்லாக் காட்சிகளுக்கு தயாராக இருப்பதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அக்ஷராவின் சகோதரி ஸ்ருதிஹாசன் முதல் படத்திலேயே பிகினியில் வந்து இளவட்டங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பது தெரிந்ததே. தந்தை கமல்ஹாசன் போல விருதுகளுக்கு குறிவைக்கும் படத்தில் நடிக்காமல், அக்கா வழியில் கமர்ஷியல் கவர்ச்சியில் குதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை வெளியாகவுள்ள ‘ஷமிதாப்’ படத்தின் ரிசல்ட்டை அக்ஷாரா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்த படத்திற்கு கிடைக்கும் ரிசல்ட்டை பொருத்துதான் அவர் தன்னுடைய பாதையை முடிவு செய்வார் என்று அவருடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*