சினிமா ஃபீல்டு கேவலமா? மனிஷா டென்ஷன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திரையுலகை பற்றி கேவலமாக பேசுபவர்கள் மீது சாடி உள்ளார் மனிஷா கொய்ராலா.44 வயதாகும் மனிஷா கொய்ராலா கேன்சர் நோய்க்கான சிகிச்சை பெற்று மீண்டிருக்கிறார். மும்பையில் நடந்த விருது விழா ஒன்றில் பங்கேற்றார்.

பின்னர் இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் அவர் கூறும்போது, ‘விருது விழா எனக்கு பழைய நினைவுகளை வரவழைத்தது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். திரையுலகம் எவ்வளவு உயர்வானது என்ற நினைவு என் மனதில் நீங்காமல் இடம்பெற்றிருக்கிறது. பழம்பெரும் நடிகை காமினி கவுஷல் விருது பெறும்போது எழுந்து நின்று அவருக்கு திரையுலகினர் வாழ்த்து கூறினர்.

ரேகா, ஜெயாபச்சன் ஆகியோர் காமினி மேடையிலிருந்து கீழ் இறங்கும்வரை மரியாதை தரும் விதமாக நின்றுக்கொண்டே இருந்தனர். அதேபோல் சீனியர் நடிகை ரேகா (ஜெமினி மகள்) வந்தபோது அவரது காலை தொட்டு இளம் நடிகர் ரன்பீர் கபூர் வணங்கினார். இதையெல்லாம் பார்க்கும்போது சினிமாவுலகை பற்றி சிலர் எவ்வளவு தவறாக பேசினாலும் அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. இதற்காக திரையுலகுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*