பளுதூக்குதலில் தங்கம் வென்றார் சதீஷ்

பிறப்பு : - இறப்பு :

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார்.

கேரளத்தின் பல்வேறு நகரங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

சர்வீசஸ் முன்னிலை: போட்டியின் 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை முடிவில், சர்வீசஸ் விளையாட்டு மேம்பாட்டு வாரியம் 16 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஹரியாணா 15 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் 2ஆம் இடத்திலும், மகாராஷ்டிரம் 9 தங்கம், 15 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.

பளுதூக்குதல்: காமன்வெல்த் போட்டிகளில் ஸ்னாட்ச் பிரிவில் சாதனை படைத்து தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், 77 கி. எடைப் பிரிவில் மொத்தம் 307 கி. எடை தூக்கி தங்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூர் 85 கி. எடைப் பிரிவில், மொத்தம் 339 கி. எடை தூக்கி புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுதல்: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சர்வீசஸ் வீரர் விஜய்குமார் ஆடவர் 25 மீ. சென்டர் ஃபயர் பிஸ்டல் போட்டியில் தனிநபர் மற்றும் அணிப் போட்டிகளில் தங்கம் வென்றார்.

தனிநபர் பிரிவில், விஜய்குமார் 583 புள்ளிகள் எடுத்தார். அணிப் பிரிவில், அவர் இடம் பெற்ற அணி 1,733 புள்ளிகள் எடுத்தது.

மகளிர் 50 மீ. ரைபிள் புரோன் போட்டியில், கேரளத்தின் எலிசபெத் கோசி 618.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.

ஆடவர் டிராப் பிரிவில், உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற பஞ்சாப் வீரர் மானவ்ஜித் சாந்து 25 புள்ளிகள் எடுத்து வெண்கலத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இப் போட்டியில், உத்தரப் பிரதேசத்தின் அனிருத் சிங் (26 புள்ளிகள்) தங்கமும், அன்வர் சுல்தான் (25) வெள்ளியும் வென்றனர்.

நீச்சல்: 400 மீ. ஆடவர், மகளிர் தனிநபர் மெட்லே, 50 மீ. ஆடவர், மகளிர் பிரீஸ்டைல், 200 மீ. ஆடவர், மகளிர் பேக் ஸ்ட்ரோக் போட்டிகளில் புதிய சாதனை படைக்கப்பட்டது.

400 மீ. தனிநபர் மெட்லே போட்டியில் தமிழகத்தின் வி.கே.ஆர்.மீனாட்சி வெள்ளி வென்றார்.

200 மீ. பேக் ஸ்ட்ரோக் போட்டியில் தமிழகத்தின் சேதுமாணிக்கவேல் வெண்கலம் வென்றார்.

மல்யுத்தம்: ஹரியாணாவின் மனோஜ் குமார் பிரீஸ்டைல் 65 கி. எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.

ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு தமிழகத்தின் செüரவ் கோஷல், ஹரீந்தர் பால் சிங் சாந்து, மகளிர் பிரிவில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா, ஆர்.லட்சயா ஆகியோர் தகுதி பெற்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit