இதயத்துள் வாழும் இமயம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இதயத்துள் வாழும் இமயம்

என் உயிர் சுமந்தவள்
தாயானாள்
அந்தஉயிர்
ஊரறிய
உரமானவர் -நீங்கள்தான்
வாப்பா.

எத்தனையோஉளவியல்
கொள்கைகளை
கற்றிரிக்கிறேன் – ஆனால்
உங்கள்
உளவியல்
உண்மைகழுக்குள்
அவைஎல்லாம்
கடுகாகவேதெரிகிறது
வாப்பா.

இன்னும் உங்கள்
விரல் பிடித்து
நடப்பதற்கே- என்
ஆள்மனசு
ஆசைப்படுகிறது
வாப்பா.

உங்கள்
நெற்றிவியர்வை
துளிகளுக்குள்ளேதான்
என் எதிர்காலம்
ஏகாந்தமாய் பூத்தது
வாப்பா.

அகவைஅறுபதைதாண்டியும்
எமக்காக இன்னும்
கடிகாரமாய்
ஓயாமல் ஓடிஓடி
உழைக்கும்
உத்தமன் நீங்கள்தான்
வாப்பா.

என்னைநீராட்டி
ஆடையிட்டு
தலைக்குஎண்ணெய் பூசி
பவுடர் தடவி
துவிச்சக்கரவண்டியிலே
முன் பாரில் அமரவைத்து
உங்கள் கைவிரலால்
என்னைபிடித்துக் கொண்டு
செல்கையிலே
உங்கள் கை விரல் தந்த
ஸ்பரிசத்தை
நாப்பதுவயதினிலேயும்
இன்னும் நான் உணர்கிறேன்,
மீண்டும் சிறுவனாய் மாறி
உங்களோடு
துவிச்சக்கரவண்டி
சவாரிசெல்ல
ஆசைப்படுகிறதேமனது
வாப்பா.

நான் எதைக்கேட்டாலும்
இல்லைஎன்றுசொல்லாமல்
வாங்கித்;தரும் உங்களின்
உள்ளம்
இமயத்தின் உச்சைத்தைவிட
பெரியதுதான்
வாப்பா.

அந்தகிராமத்தின்
முதல் படித்தவர்
தசாப்தம் தாண்டியும்
ஊர்
தலைவர் எனும்
தாரகையாய்
தடம்பதித்த
தன்னலம் இல்லா
தவப்புதல்வன்.

கிராமஅபிவிருத்திக்காய்
ஆயராதுழைக்கும்
ஆற்புதஆணிவேர்.

முகாமையாளராய்
முழுநாழுமே
ஓய்வின்றிஊருக்கு
உழைத்த
அகல்விழக்கு
உங்கள்
உதிரத்தில்
முழைத்ததால்
உங்கள் பெயர் சொல்லி
நான் வளர்கிறேனேஅதனால்
பெருமைஎனக்கு
வாப்பா.

கொழுப்புக்குப் போய்
நீர்க்குருவிவாங்கிவந்து
நாங்கள் எல்லாம்
நாளெல்லாம்
ஊதிஊதி
வீடெல்லாம்
நீர் நனையவிழையாட்டு,
இன்னும் என்
நெஞ்சுக்குள்ளே
தொக்கிநிற்கிறது
வாப்பா.

இரண்டுவயதில்
நீங்கள் என் முடிக்கிட்ட
சயிட்டுவகுப்பு
சரியாமல் இன்னும்
நெடுஞ்சாலையாய்
நாற்பதுவயதிலும்
உங்கள் பெயர்சொல்லி
நிற்கிறதுவாப்பா.

வாலிபவயதினிலே
ஓரேஒருநாள்
உங்கள் சத்தத்திற்கு
சற்றுமேலாக
கதை;துவிட்டேனே
என்றெண்ணி
இன்றும் கூட
கவலையில்
கண்ணீர்
கசிகிறது-என்னை
மன்னித்துவிடுங்கள்
வாப்பா.

உங்களுக்கருகே இருந்து
பணிவிடைகள் செய்ய
துடிக்கிறது
இக்கரையில்
இந்தபாவிமனசு.

நான் படித்து
பட்டம் பெற
ஒருசதகாசேனும்
என் உழைப்பில்
பெறவில்லை
அத்தனையும்
உங்கள் உழைப்பின்
முதலீடுகள்தான்
நன்றிகள்
அல்லா ஹ்வேமுதல் உனக்கு
அடுத்தாய்
உங்களுக்குத்தான்
வாப்பா.

நான் வளர
உரமாய் போனவரே
உங்களை
கட்டியணைத்து-உங்கள்
வியர்வைதுளிகளை
என் உடம்பெல்லாம் பூசி
என் சுவாசத்தை
உங்கள் வியர்வை
மணத்தாலே
கழுவிவிட
தாகித்திருக்கிறது
என் மனசு
வாப்பா

கருணையாளனே
அளவற்றஅருளாளனே
அகிலத்தின் அதிபதியே
அல்லாஹ்வே
என் வாப்பாவுக்கு
உன் அருளால்
தேகசுகத்தோடு
காற்றுள்ளவரை
வாழ்ந்திரிக்க
வரம் கொடுத்துவிடு.

பாலமுனையு.எல். அலி அஷ்ரஃப்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*