ரோஹித், இஷாந்த், புவனேஷ்வர், ஜடேஜாவுக்கு 7-இல் உடற்தகுதித் தேர்வு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜாவுக்கு பிப்ரவரி 7-இல் உடற்தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

இது குறித்து அடிலெய்டில் அணி நிர்வாகத்தைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது:

இந்த 4 ஆட்டக்காரர்களுக்கு 2 முறை உடற்தகுதித் தேர்வு நடைபெறும். பிப்ரவரி 7இல் நடைபெறும் உடற்தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 8இல் இந்தியா விளையாடும் ஆட்டத்தில் பரிசோதிக்கப்படுவர்.

அதற்குப் பிறகு, அவர்கள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். தசைப் பிடிப்பால் அவதிப்பட்டுவரும் ரோஹித் சர்மா 80 சதவீதம் குணமடைந்துவிட்டார். பயிற்சி ஆட்டத்துக்கு முன் அவர் பூரணமாக குணமடைந்து விட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், மற்றவர்கள் குறித்து இதுபோன்று உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது.

வேகப் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா முழங்கால் வலியாலும், புவனேஷ்வர் குமார் கணுக்கால் வலியாலும், சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தோள்பட்டை வலியாலும் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit