பயஸ் – ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது.

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இப்போட்டியின் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள பயஸ் ஜோடி ஒரு மணி 2 நிமிடங்களில் 6-4, 6-3 என தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள கனடாவின் டேனியல் நெஸ்டர், பிரான்ஸின் கிறிஸ்டினா லாட்னோவிக் ஜோடியை சாய்த்தது.

முதல் செட்டில் ஒரு முறையும், இரண்டாவது செட்டில் 2 முறையும் எதிர் ஜோடியின் சர்வீûஸ பயஸ் ஜோடி முறியடித்தது.

ஓய்விலிருந்து ஹிங்கிஸ் இரண்டாவது முறையாக விலகி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் களத்தில் இறங்கினார்.

41 வயதாகும் பயஸூம், 34 வயதாகும் ஹிங்கிஸூம் கடந்த ஆண்டுதான் ஜோடி சேர்ந்தனர்.

இருவருக்குமே இது 15ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் வெல்லும் 7ஆவது பட்டம் இது. 3 ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் பட்டம் உள்பட 5 ஒற்றையர் பட்டங்கள் தவிர 10 முறை இரட்டையர் பிரிவில் ஹிங்கிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவரத்திலோவாவுக்கு நன்றி: பயஸூடன் ஜோடி சேர ஆலோசனை வழங்கிய தனது ஆதர்ஷ வீராங்கனையும், டென்னிஸ் ஜாம்பவானுமான மார்ட்டினா நவரத்திலோவாவுக்கு நன்றி தெரிவிப்பதாக, ஆட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மார்ட்டினா ஹிங்கிஸ் தெரிவித்தார்.

1995இல் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் களம் கண்ட நான், 20 ஆண்டுகளுக்குப் பின் இதே மைதானத்தில் பட்டம் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

பயஸூடன் இணைந்து 2003இல் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனில் பட்டம் வென்ற மார்ட்டினா நவரத்திலோவா, இந்த கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்தார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு: கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற பயஸூக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது சுட்டுரையில் (டுவிட்டர்) பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது: லியாண்டர் பயஸ் தொடர்ந்து நமது தேசத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற அவருக்கு வாழ்த்துகள் என மோடி தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*