தேசிய விளையாட்டு போட்டியில் சோகம் வலைபந்து வீரர் மாரடைப்பில் மரணம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

35-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கேரளாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று காலை வேளாண்மை கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் சண்டிகார் மாநிலத்திற்கும் மராட்டிய மாநிலத்திற்கும் இடையே வலைபந்து போட்டி நடைபெறுவதாக இருந்தது. போட்டியில் விளையாடும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது மாரட்டிய மாநில வீரர் மயூரேஷ் பவாருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாகடர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.உடனடியாக பவார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். ஆனால் பவார் இறந்து விட்டதாக டாகடர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தேசிய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் கூறும்போது

பவார் அவரது சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் திடீர் என சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பவார் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர் என கூறினார்கள்.

மாணவரின் உடல் பிரேத பரிச்சோதனைக்கு பிறகு அந்த அணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஓப்படைக்கபட்டது. கேரள விளையாட்டு துறை மந்திரி திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் மணவரின்ன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். பவாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவை அரசு ஏற்று கொள்ளும் என தெரிவித்து உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*