பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் அமீர் மீதான தடையை ஐ.சி.சி. நீக்கியது!

பிறப்பு : - இறப்பு :

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் அமீர் மீதான தடையை ஐ.சி.சி. நீக்கியுள்ளது.

ஸ்பொட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் அமீருக்கு 5 ஆண்டு தடை விதித்து கடந்த 2010 ஆம்ஆண்டு ஐ.சி.சி. உத்தரவிட்டது. இந்த தண்டனை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைகின்றது.

இந்த நிலையில் அமீர் மீதான தடையை தளர்த்தி ஐ.சி.சி. நேற்று உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தான் தவறு செய்ததை அமீர் ஒப்புக்கொண்டதாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாலும் அவருக்கு எதிரான தடை தளர்த்தப்பட்டதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தடையை நீக்கி மறு ஆய்வு செய்யுமாறு ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit