முத்தரப்பு கிரிக்கெட்டின் போது அனைத்து வீரர்களும் பிட்டாகவில்லை’ மகேந்திரசிங் டோனி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதிபோட்டிக்கு நுழையமுடியாமல் வெளியேறியதற்கு வீரர்கள் காயம் மற்றும் ஆயத்தமின்மையை, கேப்டன் மகேந்திர சிங் டோனி காரணம் காட்டியுள்ளார்.

பெர்த்தில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் கடைசி லீக்கில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியஅணி தோல்வி அடைந்தது. மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் பெரும் தோல்வியில் முடிந்தது. முதலில் நடத்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய கோட்டைவிட்டது. முத்தரப்பு போட்டியிலும் நடையை கட்டிவிட்டது. பெர்த்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பேசுகையில்,

“உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, வேகத்தை செயல்படுத்த மிகவும் முக்கியமான ஒன்றாகும், ஆனால் இந்திய அணியில் உள்ள 15 வீரர்களும் உடனடியாக ஆயத்தமாக வேண்டும் என்பது நமக்கு தேவைப்படுகிறது. முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின்போது அனைத்து வீரர்களும் ஆயத்தமாகவில்லை.” என்று கூறியுள்ளார். முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் தோல்வியுற்று இந்திய அணி நடையை கட்டியதற்கு இதனை டோனி காரணம் காட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாட தயாராக உள்ளோம். அதற்கு இடைப்பட்ட நாட்கள் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும். டெஸ்ட் தொடர்பயிற்சி உங்களுக்கு நிறைய கற்று கொடுத்திருக்கும், நாம் மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் நமது நம்பிக்கையை பெறவேண்டும் என்று டோனி பேசியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit