அரையிறுதியில் ஜோகோவிச், வாவ்ரிங்கா, செரீனா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான ஸ்டான் வாவ்ரிங்கா ஆகியோர் முன்னேறினர். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், மேடிசன் கீஸ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

மெல்போர்னில் புதன்கிழமை ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வாவ்ரிங்காவும், ஜப்பானைச் சேர்ந்த கீ நிஷிகோரியும் மோதினர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 6-3, 6-4, 7-6(6) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

ஐந்தாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் வெல்லக் காத்திருக்கும் ஜோகோவிச், 47 ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் கனட வீரரான மிலோஸ் ரயோனிச்சை எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் தங்களது சர்வ் மூலம் புள்ளிகளைப் பெற, அந்த செட் டை பிரேக்கர் வரை நீண்டது. அதை ஜோகோவிச் வசப்படுத்தினார்.

இரண்டாவது செட்டில் ரயோனிச் அபாரமாக சர்வ் செய்தார். ஆனால், ஜோகோவிச் போல ரயோனிச் நேர்த்தியான ஷாட்கள் அடிக்கத் தவறியதால் அந்த செட்டும், செர்பிய வீரர் வசமானது. மூன்றாவது செட்டை சிரமமேதும் இன்றி ஜோகோவிச் வசப்படுத்தினார்.

இந்த ஆட்டத்தில் ரயோனிச் மொத்தம் 15 ஏஸ் சர்வ் செய்தபோதிலும், 36 முறை

அன்ஃபோர்ஸ்டு எரர்ஸ் (பந்தை வலையில் அடித்தல்) செய்ததும், பேக்ஹேண்ட் ஷாட்களில் திணறியதும், ஒரு முறை கூட ஜோகோவிச்சின் சர்வை பிரேக் செய்யாததும் ரயோனிச் தோல்வியடைய வழிவகுத்தது.

அதேசமயம், 33 வின்னர்ஸ், 8 ஏஸ் சர்வ் உள்பட தனது தேர்ந்த ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்று, 25ஆவது முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

செரீனா வெற்றி:

மகளிர் பிரிவில் 18 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற செரீனா வில்லியம்ஸ், ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவை சந்தித்தார். தரவரிசையிலும், போட்டித் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ள செரீனா, போட்டித் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள சிபுல்கோவாவை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி, 26ஆவது முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆனால், செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டைச் சேர்ந்த மேடிசன் கீஸிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். மூன்று செட் வரை நீண்ட இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

முதல் ஆட்டத்தில் இருந்து இந்த ஆட்டம் வரை நான் எப்படி ஆட நினைத்தேனோ, அப்படி ஆடி வருகிறேன். பல பிரேக் பாயின்ட் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேன். எனது திட்டங்களை சரியாக செயல்படுத்தினேன். வெற்றி என எளிதாக சொல்லி விடலாம். ஆனால், அதை அடைய கடும் முயற்சி மேற்கொண்டேன்.

ஜோகோவிச், செர்பியா

சிறப்பாக ஆட

முயற்சித்தேன். ஆனால், அவரது (ஜோகோவிச்) ஆட்டம் அபாரமாக

இருந்தது. வாய்ப்புகளை அவர் என்னிடம் இருந்து பறித்து விட்டார்.

-மிலோஸ் ரயோனிச், கனடா.

அரையிறுதியில் சானியா, பயஸ் ஜோடிகள்

கலப்பு இரட்டையர் பிரிவினருக்கான காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி 53 நிமிட போராட்டத்துக்குப் பின் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் கேசி டெலகுவா, ஜான் பீர்ஸ் ஜோடியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் ஆண்ட்ரியா லவகோவா, அலெக்ஸாண்டர் பெயா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

காலிறுதி முடிவுகள்

வாவ்ரிங்கா (சுவிஸ்) – நிஷிகோரி (ஜப்பான்) 6-3, 6-4, 7-6(6)

ஜோகோவிச் (செர்பியா) – ரயோனிச் (கனடா) 7-6(5), 6-4, 6-2

மகளிர்

மேடிசன் கீஸ் (அமெரிக்கா) – வீனஸ் (அமெரிக்கா) 6-3, 4-6, 6-4

செரீனா (அமெரிக்கா) – சிபுல்கோவா (ஸ்லோவவேகியா) 6-2, 6-2

அரையிறுதி அட்டவணை

தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) – ஆன்டி முர்ரே (பிரிட்டன்)

வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)- ஜோகோவிச் (செர்பியா)

மகளிர்

ஷரபோவா (ரஷியா) – மகரோவா (ரஷியா)

செரீனா (அமெரிக்கா) – மேடிசன் கீஸ் (அமெரிக்கா)

டை பிரேக்கரை நினைத்தால் இப்போதும் பதற்றமாக இருக்கிறது. தற்காப்புடனே ஆடினேன். இறுதியில் வெற்றி பெற்று, மீண்டும் ஒரு முறை அரையிறுதியில் ஆட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.

வாவ்ரிங்கா, சுவிட்சர்லாந்து.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*