ஆம்லா, ரோஸோ சதம்: தென் ஆப்பிரிக்கா அபாரம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், ஹசிம் ஆம்லா, ரிலீ ரோஸோ ஆகியோர் சதம் அடிக்க, தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 361 ரன்கள் விளாசியது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை ஏற்கெனவே 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி விட்டது. ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் செஞ்சுரியனில் புதன்கிழமை நடைபெற்றது. டி வில்லியர்ஸூக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆம்லா கேப்டன் பொறுப்பேற்றார்.

மழை காரணமாக ஆட்டம் இரண்டரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. எனவே, ஆட்டம் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆம்லாவுடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்கிய டி காக், ஹோல்டர் வீசிய இரண்டாவது ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். அவர் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டூ பிளஸ்ஸிஸ் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

அடுத்து ரிலீ ரோஸோ, ஆம்லா இருவரும் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்தனர். அதிரடியாக ஆடிய ரோஸோ சதம் அடித்தார். குறிப்பாக முதல் 60 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அடுத்த 23 பந்துகளில் சதம் அடித்திருந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 247 ரன்கள் விளாசினர். ஒரு வழியாக ரசெல் பந்தில் ரோஸோ ஆட்டமிழந்தார். 98 பந்துகளை சந்தித்த அவர் 8 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார்.

மறுமுனையில் டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த ஆம்லாவும், தனது பங்குக்கு சதம் அடித்தார். 105 பந்துகளில் 133 ரன்கள் அடித்திருந்த ஆம்லா, ரசெல் பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து 9 பந்தில் தலா இரண்டு சிக்ஸர், பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடித்து மிரள வைத்தார் மில்லர்.

42 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 361 ரன்கள் எடுத்தது. ஜேபி டுமினி 18, பெஹார்டியன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரசெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக ரோஸோ, ஆம்லா இருவரும் சதம் அடித்துள்ளனர். ஆம்லா மொத்தம் 412 ரன்கள் விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*