ரொனால்டோ தண்டிக்கப்பட வேண்டும்’

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கோர்டோபா அணி வீரர் எடிமருடன் மோதலில் ஈடுபட்ட ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பார்சிலோனா அணியின் நெய்மர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற லா லிகா கால்பந்து தொடரில், கோர்டோபா அணிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பின்கள வீரர் எடிமரை, ரொனால்டோ தள்ளி விட்டார். உடனடியாக ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் தன் செயலுக்கு ரொனால்டோ வருத்தம் தெரிவித்தார். “என் முறையற்ற செயலுக்காக எடிமர் உள்பட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று ரொனால்டோ சுட்டுரையில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ரொனால்டோவுக்கு மூன்று ஆட்டங்கள் வரை தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மர் கூறுகையில், “”சில நேரங்களில் முன்கள வீரர்களின் கோவத்தை தூண்டும் விதத்திலான செயல்களும், அச்சுறுத்தல்களும் நடைபெறும். இதனால், நம் இயல்பை இழக்க நேரிடும். அதுபோன்ற சூழலில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், பழிவாங்கும் செயலில் ஈடுபட்டதால் ரொனால்டோ தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

ரொனால்டோவுக்கு மூன்று ஆட்டங்கள் தடை விதிக்கப்படும் பட்சத்தில், ரியல் சோசியாதத், அட்லெடிகோ மாட்ரிட், செவிலா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவர் பங்கேற்க முடியாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*