சில மணிநேரம் முடங்கிய பேஸ்புக்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை இன்று (செவ்வாய்க்கிழமை) உலக அளவில் முடங்கியது. இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 மணியளவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை பாதித்தது. இதையடுத்து, மற்றொரு முக்கிய சமூக வலைதளமான ட்விட்டரை நோக்கி இணையவாசிகள் படையெடுத்தனர்.

ஃபேஸ்புக் தளத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், ‘மன்னிக்கவும் சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது.

ஃபேஸ்புக் தளம் முடங்கிய அடுத்த நொடிகளில், அதுகுறித்த தகவலை ட்விட்டரில் இணையவாசிகள் பகிர்ந்தவண்ணம் இருந்தனர். facebook down என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டிங் டாப்பிக் ஆனது.

உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி, ஆப்-களிலும், மொபைலிலும் இந்த முடக்க பாதிப்பு ஏற்பட்டது. இந்த முடக்கத்துக்கான காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*