காலிறுதியில் ஜோகோவிச், வாவ்ரிங்கா, செரீனா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச், நடப்பு சாம்பியனான ஸ்டான் வாவ்ரிங்கா, மகளிர் பிரிவில் செரீனா ஆகியோர் முன்னேறினர்.

இந்த சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், நான்கு முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிச், லக்ஸம்பர்கின் கில்லெஸ் முல்லரை சந்தித்தார். இதில், தனது முதல் சர்வ்கள் மூலம் 82 சதவீத புள்ளிகளைப் பெற்ற ஜோகோவிச் நேர் செட்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து எட்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

வெற்றிக்குப் பின் அவர் கூறுகையில், “”மூன்றாவது செட்டில் முக்கியமான கட்டத்தில் நன்றாக “சர்வ்’ செய்ததும், மூன்று முறை அவரை “பிரேக் பாயின்ட்’ பெற விடாமல் தடுத்ததும் வெற்றிக்கு உதவியது” என்றார்.

சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் கிளெர்மோ கார்சியா லோபûஸ போராடித் தோற்கடித்தார். குறிப்பாக, “டை பிரேக்கர்’ வரை நீண்ட நான்காவது செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

வரலாறு படைத்த ரயோனிக்: வேகமாக “சர்வ்’ வீசுவதில் வல்லவரான கனடாவின் மிலோஸ் ரயோனிக், போட்டித் தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபûஸ போராடி வீழ்த்தினார். 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 30 “ஏஸ்’ சர்வ்களை வீசி ரயோனிக் வெற்றி பெற்றார். இதன் மூலம், 47 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய ஓபனின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் கனட வீரர் என்ற பெருமையை ரயோனிக் தட்டிச் சென்றார்.

ஜப்பானின் கீ நிஷிகோரி, ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் மோதிய ஆட்டத்தில் நிஷிகோரி எளிதில் வெற்றி பெற்றார்.

செரீனா வெற்றி நடை: மகளிர் பிரிவில், 19ஆவது கிராண்ட் ஸ்லாம் வெல்லக் காத்திருக்கும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸூக்கு, ஸ்பெயினின் கேர்பின் முகுருஸா கடும் சவாலாக இருந்தார்.

முதல் செட்டை இழந்த செரீனா, பின்னர் எழுச்சி பெற்று அடுத்தடுத்து இரண்டு செட்களைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார்.

இந்தத் தொடரில் செரீனா தோல்வியடைந்து, ஷரபோவா பட்டம் வென்று விட்டால், செரீனா தரவரிசையில் முதலிடத்தைப் பறிகொடுக்க நேரிடும்.

செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்காவைத் தோற்கடித்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா, ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவிடம் தோல்வியடைந்து, கண்ணீர் மல்க வெளியேறினார்.

காலிறுதி அட்டவணை: மகளிர் பிரிவு

ஷரபோவா (ரஷியா) – பெளசார்டு (கனடா)

சிமானோ ஹாலேப் (ருமேனியா) – மகரோவா (ரஷியா)

செரீனா (அமெரிக்கா) – சிபுல்கோவா (ஸ்லோவேகியா)

வீனஸ் (அமெரிக்கா) – மேடிசன் கீஸ் (அமெரிக்கா)

ஆடவர் பிரிவு

ஜோகோவிச் (செர்பியா) – ரயோனிக் (கனடா)

வாவ்ரிங்கா (சுவிஸ்) – நிஷிகோரி (ஜப்பான்)

தாமஸ் பெர்டிச் (செர்பியா) – நடால் (ஸ்பெயின்)

ஆன்டி முர்ரே (பிரிட்டன்) – நிக் கிர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா)

வெற்றி: வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)

தோல்வி: அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா (போலந்து)

செட்: 6-3, 2-6, 6-1

வெற்றி: கீ நிஷிகோரி (ஜப்பான்)

தோல்வி: டேவிட் ஃபெரர் (ஸ்பெயின்)

செட்: 6-3, 6-3, 6-3

வெற்றி: மிலோஸ் ரயோனிக் (கனடா)

தோல்வி: ஃபெலிசியானோ லோபஸ் (ஸ்பெயின்)

செட்: 6-4, 4-6, 6-3, 6-7(7), 6-3

வெற்றி: மேடிசன் கீஸ் (அமெரிக்கா)

தோல்வி: மேடிசன் பிரெங்கிள் (அமெரிக்கா)

செட்: 6-2, 6-4

வெற்றி: வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)

தோல்வி: அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா (போலந்து)

செட்: 6-3, 2-6, 6-1

வெற்றி: ஜோகோவிச் (செர்பியா)தோல்வி:

கில்லெஸ் முல்லர் (லக்ஸம்பர்க்)

செட்: 6-4, 7-5, 7-5

வெற்றி: செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)

தோல்வி: கேர்பின் முகுருஸா (ஸ்பெயின்)

செட்: 2-6, 6-3, 6-2

வெற்றி: டொமினிகா சிபுல்கோவா (ஸ்லோவேகியா)

தோல்வி: விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்)

செட்: 6-2, 3-6, 6-3

வெற்றி: ஸ்டான் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)

தோல்வி: கிளெர்மோ கார்சியா லோபஸ் (ஸ்பெயின்)

செட் விவரம்: 7-6(2), 6-4, 4-6, 7-6(8)

சானியா, பயஸ் ஜோடிகள் வெற்றி

கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா, பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி, அபிகெய்ல் ஸ்பியர்ஸ், சான்டியாகோ

கான்ஸ்லஸ் ஜோடியை 7-5, 6-7 என்ற நேர் செட்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்ஸ் ஜோடி, ஸ்பெயினின் அனபெல் மெதினா, பப்லோ அந்துஜர் ஜோடியை 6-3, 6-1

என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*