மழையால் ஆட்டம் ரத்து: போட்டியில் நீடிக்கிறது இந்தியா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன. இதனால், இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலகக் கோப்பைக்கு ஒத்திகையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்றுள்ளன. டபுள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இப்போட்டியில், ஆஸ்திரேலியா ஏற்கெனவே இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. எனவே, இறுதி ஆட்டத்துக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு எதிரான ஆட்டங்களிலும் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணி, திங்கள்கிழமை சிட்னி நகரில் ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஷிகர் தவன், ரஹானே தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார். இந்த முறையும் ஷிகர் தவனின் ஆட்டம் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கக் கூடும். மிச்செல் ஸ்டார்க் வீசிய ஏழாவது ஓவரின் முதல் பந்து, அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் செல்ல, கால்களை நகர்த்தாமலே “பொசுக்கென’ பேட்டை நீட்ட, பந்து முதல் ஸ்லிப் நோக்கி பயணிக்க, அங்கு அதற்காகவே காத்திருந்த ஆரோன் ஃபின்ச் அசைவு ஏதுமின்றி எளிதாக கேட்ச் செய்ய, ஷிகர் தவன் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். அவர் அடித்த ரன்கள் 8. அப்போது “ஷிகர் தவன் நம்மோடு டிவியில் மேட்ச் பார்க்க வேண்டிய ஆளு’ என, ரசிகர் ஒருவர் சுட்டுரையில் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

அடுத்ததாக, விராட் கோலிக்கு முன்னதாக அம்பதி ராயுடு களமிறங்கினார்.

தான் அந்த இடத்தில் இறங்கியது சரியே என்பதை நிரூபிக்கும் வகையில், ஹேஸில்வுட் பந்தில் “மிட் ஆன்’ திசையில் பவுண்டரியும், மிச்செல் மார்ஷ் வீசிய அடுத்த ஓவரில் “லாங் ஆன்’ திசையில் சிக்ஸரும் பறக்க விட்டார். மார்ஷ் 135 கி.மீ. வேகத்தில் பெüன்ஸராக வீசிய பந்தை விக்கெட் கீப்பருக்கு பின்புறம் நேக்காக தட்டிவிட, இந்த நேரத்தில் இப்படித்தான் ஆட வேண்டும் என்ற வகையில் இருந்தது அம்பதி ராயுடுவின் ஆட்டம். ஆனால், அந்த ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்பதே துரதிருஷ்டம். அதே ஓவரில் சிக்ஸர் அடிக்கிறேன் என இறங்கி அடிக்க, கவர் திசையில் இருந்து ஓடிச் சென்று அற்புதமாக பந்தைப் பிடித்தார் டேவிட் வார்னர். அம்பதி ராயுடு 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலியும், ரஹானேவும் தங்களுக்கே உரிய பாணியில் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ரஹானே 28, விராட் கோலி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டத்தைத் தொடர முடியாத அளவுக்கு மழை நீடித்ததால், மூன்று மணி நேரத்துக்குப் பின், ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால், இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் கிடைத்தன. ஆஸ்திரேலியா தற்போது 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஐந்து புள்ளிகளுடனும், இந்தியா இரண்டு புள்ளிகளுடனும் உள்ளன. எனவே, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், ஆறு புள்ளிகளைப் பெற்று, எவ்வித சிரமும் இன்றி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி விடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*