பிலிப்பைன்ஸில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்!:43 பேர் பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தெற்கு பிலிப்பைன்ஸில் போலிஸ் கமாண்டோக்களுக்கும் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திடீரென மூண்ட கடும் மோதலில் போலிஸ் வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் உட்பட 43 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்பகுதியில் பல தசாப்தங்களாக இருந்து வரும் குழப்ப நிலையை நீக்குவதற்கு சமீபத்தில் மும்மொழியப் பட்ட சமாதான முயற்சியில் இச்சம்பவம் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப் படுகின்றது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து போலிசார் வெளியிட்ட அறிக்கையில் பெருமளவான உயிரிழப்புக்கள் அரச தரப்பிலேயே ஏற்பட்டுள்ளதாகவும் பிலிப்பைன்ஸின் தேசிய போலிஸ் அமைப்பின் விசேட உயரடுக்கு படையைச் சேர்ந்த 37 உறுப்பினர்கள் இதில் பலியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மகுயின்டனாவோ இன் மமசப்பனோ நகரில் சுமார் 12 மணித்தியாலங்களாக நீடித்த இம்மோதலில் போராளிகள் தரப்பில் 6 பேர் கொல்லப் பட்டும் 11 பேர் காயமடைந்தும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இம்மோதலில் MILF எனப்படும் அரசுடன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த போராளிகளும் BIFF எனப்படும் அரசுடன் எந்தவித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடாத போராளி அமைப்பும் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இப்பகுதியில் அரச போலிஸ் படைகள் தாக்குதலைத் தொடர்ந்ததற்கு முக்கிய காரணமாக மார்வன் என அழைக்கப் படும் மலேசியாவைச் சேர்ந்த வெடிகுண்டு தயாரிக்கும் நிபுணத்துவம் மிக்க ஷுல்கிஃப்லி பின் ஹிர் என்ற தீவிரவாதியைக் கைது செய்யும் நோக்கமும் அமைந்திருந்தது. பிலிப்பைன்ஸின் முக்கிய கிளர்ச்சிப் படை போராளியான அபு சய்யாஃப் இற்காக வெடிகுண்டு தயாரிக்க உதவ 2003 ஆம் ஆண்டு முதல் மார்வன் பிலிப்பைன்ஸில் இரகசியமாகத் தங்கி இருப்பதாகக் கருதப் படுவதுடன் அவனது தலைக்கு $5 மில்லியன் தொகையை பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச்சில் பிலிப்பைன்ஸில் கிளர்ச்சியாளர்களும் அரசும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதில் இருந்து நடைபெற்ற முதல் பாரிய மோதல் சம்பவம் நேற்று போலிசாருக்கும் போராளுகளுக்கும் இடையே மூண்ட யுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது, இவ்வொப்பந்தத்துக்கு முன் சுமார் 4 தசாப்தங்களாக தென் பிலிப்பைன்ஸில் நீடித்த உள்நாட்டுப் போரில் 120 000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டும் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தும் இருந்தனர்.

இந்த சமாதான ஒப்பந்தப் பிரகாரம் 2016 ஆம் ஆண்டு மே மாதம் பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள தேர்தல் புதிய அரசை அமைப்பதற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் முக்கிய திருப்பு முனையாக அமையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*