எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆயிடுச்சே..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆகிவிட்டது.. என்று புலம்பும் நிலையை உருவாக்கிவிட்டனரே என்ற ஆதங்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 அணிகள் அப்போது களம் கண்டன. ‘ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர்’ என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர்தான் மகேந்திரசிங் டோணி. சென்னை அணியின் கேப்டனாக அப்போது முதல் டோணிதான் சென்னையின் கேப்டனாக தொடருகிறார்.

இந்திய அணிக்கு பல மகுடங்களை சூட்டிய டோணி, சென்னையையும் டாப் அணியாக கொண்டுவர தவறவில்லை. பவுலிங் எல்லா சீசனிலும் சொதப்பலாகவே அமைந்திருந்தாலும், மற்ற விஷயங்களை கொண்டு அந்த குறையே தெரியாமல் பார்த்துக்கொண்டனர் டோணி தலைமையிலான வீரர்கள்.

அனைத்து ஐபிஎல் சீசன்களிலும், சீராக விளையாடும் ஒரே அணி சிஎஸ்கேதான் என்ற புகழ் அதற்கு கிடைத்தது. மற்ற அணிகளெல்லாம், ஒரு தொடரில் சிறப்பாக ஆடினால் மற்றொரு தொடரில் முதல் சுற்றிலேயே மண்ணை கவ்விவிடும். ஆனால் எப்போதும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே அணி, சிங்கத்தை தனது சின்னமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே.

அதன் சீரான ஆட்டத்திற்கு சான்று இதோ.. *2008 ஐபிஎல் தொடரில் இறுதிபோட்டி வரை வந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றது *2009ல் அரை இறுதி ஆட்டம் வரை வருகை *2010ல் ஐபிஎல் சாம்பியன் *2011ல் மீண்டும் ஐபிஎல் சாம்பியன் *2012ல் மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும் கொல்கத்தாவிடம் தோல்வி *2013ல் மீண்டும் பைனலுக்கு தகுதி. இம்முறை மும்பையிடம் தோல்வி *2014ல் பிளே-ஆப் சுற்றுவரை வருகை.

வேறு எந்த அணிக்கும் இல்லாத சீரான ஆட்டம் சென்னைக்கு மட்டுமே உண்டு என்பதை மேற்கண்ட புள்ளி விவரமே தெரிவிக்கிறது. நடப்பாண்டு ஐபிஎல்லில் பெருமளவு சோபிக்காத கோபத்தை சாம்பியன்ஸ் லீக்கில் தீர்த்துக் கொண்டது டோணி படை. ஆம், இந்தாண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டம் சென்னைக்குதான். இதற்கு முன்பு 2010லும் சிஎஸ்கே சாம்பியன்ஸ் லீக்கில் மகுடம் சூட்டியுள்ளது.

இந்நிலையில்தான், சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் மருமகன் குருநாத்மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளதால், சிஎஸ்கே அணியை ஐபிஎல்லில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் தடாலடியாக கூறியுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டோணி சென்னைக்கு ஆடுவதால் ஏற்பட்ட பொறுமல், வட இந்திய லாபிகளுக்கு இருப்பதால், சென்னைக்கு எதிராக அவர்கள் செயல்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக ஒரு குற்றச்சாட்டு வலம்வருகிறது.

இந்த சூழ்நிலையில், இணையத்தில் சென்னை ரசிகர் ஒருவர் தெரிவித்த கருத்து, “ஐபிஎல்லில் சென்னை இல்லையா… சென்னை இல்லைன்னா ஐபிஎல்லே இல்லையே”.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*