புளூட்டோ கிரகத்தை அண்மித்தது நியூஹாரிஸன்ஸ் விண்கலம்!:பெப்ரவரி முதல் புகைப்படங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாசாவின் நியூஹாரிஸன்ஸ் (New Horizons) விண்கலம் 9 வருடங்களாக சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணித்து நமது சூரிய குடும்பத்தில் மிகத் தொலைவில் உள்ள குள்ள கிரகமான (dwarf planet) புளூட்டோவை (Pluto) அண்மித்துள்ளது.

மேலும் நாளை ஞாயிற்றுக் கிழமை முதல் இதுவரை ஆராயப் படாத மிக மர்மான குளிர்ந்த கிரகமான புளூட்டோவை மிக அண்மையில் படம் பிடித்து பூமிக்குப் புகைப் படங்களை அனுப்பவுள்ளது.

எனினும் இன்னமும் நியூஹாரிஸன்ஸ் விண்கலம் புளூட்டோவில் இருந்து 100 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது எனவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும் புளூட்டோ கிரகத்துக்கான மனித குலத்தின் முதல் விஜயமான நியூஹாரிஸன்ஸ் ஞாயிறு எடுக்கவுள்ள புகைப் படங்கள் அடுத்த வாரம் தான் பூமியை வந்தடையவுள்ளன. இதுவரை பூமியிலுள்ள வலுவான தொலைக் காட்டிகளில் கூட வெள்ளை நிற சிறிய புள்ளியாகவே தென்பட்டு வந்த புளூட்டோ கிரகம் குறித்து நியூஹாரிஸன்ஸ் அனுப்பவுள்ள புகைப்படங்கள் ஜூலை மாதம் புளூட்டோவின் சுற்றுவட்டப் பாதையில் அதனைச் செலுத்துவதற்கும் உதவவுள்ளன.

சூரியனுக்கு மிகத் தொலைவில் நெப்டியூனுக்கு வெளியே கைப்பர் பட்டையில் (Kuiper Belt) உள்ள விண்பொருட்களில் மிகப் பெரியதான புளூட்டோ கிரகங்களின் வரிசையில் இருந்து விஞ்ஞானிகளால் நீக்கப் பட்ட பொழுதிலும் தனது தனித்துவமான சுற்று வட்டப் பாதை மற்றும் நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருவது போன்ற காரணங்களால் விஞ்ஞானிகளுக்குப் பல ஆச்சரியங்களை அளித்து வருகின்றது. புளூட்டோவுக்கு சாரோன் என்ற பெரிய நிலா உட்பட 5 துணைக் கிரகங்கள் உள்ளன.

இதேவேளை நியூஹாரிஸன்ஸ் விண்கலம் எதிர்வரும் மாதங்களில் புளூட்டோவினை நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் எடுக்கவுள்ளது என்பதுடன் பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து நாசா இப்புகைப்படங்களை இணையத் தளத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*