விராட் கோலியை பெரிதும் சார்ந்துள்ளது இந்தியா: திராவிட்

பிறப்பு : - இறப்பு :

இந்திய அணி மிடில் ஓவர்களில் விராட் கோலியை பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, வரும் உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக பேட் செய்ய வேண்டியது அவசியம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் திராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து “கிரிக்இன்ஃபோ’ இணையதளத்துக்கு திராவிட் அளித்த பேட்டி:

வரும் உலகக் கோப்பையில் விராட் கோலி சிறப்பாக பேட் செய்ய வேண்டும். அணிக்கு அவர் ஒரு ஊக்க சக்தியைத் தர வேண்டும். இந்திய அணி மிடில் ஓவர்களில் அவரைப் போன்ற ஒருவரைத் தான் பெரிதும் சார்ந்துள்ளது. கோலி சிறப்பாக ஆடினால், அவரைத் தொடர்ந்து பின் வரிசையில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, தோனி போன்றவர்கள் ஆட்டத்தை சிறப்புடன் முடித்து வைப்பர்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கான திட்டம் ஏதும் தோனியிடம் இல்லை. ஆனால், ஒரு நாள் ஆட்டம் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். இந்திய அணி கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், முகமது ஷமி நன்றாக யார்க்கர் வீசுகிறார். இஷாந்த் ஷர்மாவும் ஒரு நாள் ஆட்டங்களில் நன்கு பந்து வீசுவார். ஸ்விங் செய்வதில் புவனேஷ்வர் வல்லவர். இருப்பினும், எல்லா ஆட்டங்களிலும் அவரால் கடைசி நேரத்தில் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உமேஷ் யாதவும் இதே கதைதான் என்றார் திராவிட்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit