கார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேஷம்

வருமானம் திருப்தி தரும் நேரம்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக ஸ்தானாதிபதி சந்திரனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். போதிய அளவிற்கு வருமானம் வந்துசேரும். ஆரோக்கிய தொல்லை அகலும். எதை எந்த நேரத்தில் செய்ய விரும்பினீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

குரு பகவான் 8–ல் இருக்க, அவரோடு பஞ்சமாதிபதி சூரியனும் இணைந்திருப்பதால், ‘திடீர் விரயங்கள் வருமோ?’ என்று அஞ்ச வேண்டாம். வரும் விரயங்கள் நல்ல விரயங்களாகவே அமையும். குறிப்பாக புத்திர ஸ்தானாதிபதி சூரியன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். அல்லது கல்யாணம் சம்பந்தமாகப் பார்க்கும் வரன்கள் முடிவடையலாம். அதுமட்டுமல்ல, பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறுவதும், பெற்றோர்களின் மணிவிழா, முத்து விழாக்கள் நடைபெறுவதன் மூலமும் செலவுகள் சுப செலவாக மாற வாய்ப்பு உண்டு. குரு பகவான் அஷ்டமத்தில் இருந்தாலும், அஸ்தமனத்தில் இருக்கிறார். 12–ம் இடத்திற்கு அதிபதியான குரு வலிமை இழக்கும் பொழுது, நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். எனவே தொழிலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சலுகைகள் கிடைக்கும்.

இதுவரை வக்ர இயக்கத்தில் இருந்த புதனும், சுக்ரனும் இம்மாதம் வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். இடமாற்றம், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையலாம். பெண்வழிப் பிரச்சினைகள் தீரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைப்பது மட்டுமல்லாமல், அரசு வழியிலும் ஆதரவு கிடைக்கலாம்.

இம்மாதம் பரணி தீபத்தன்றும், திருக்கார்த்திகை அன்றும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், ஆலயம் சென்று வள்ளி மணவாளப் பெருமானை வழிபட்டு வந்தால் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் மாதத் தொடக்கத்தில் ஏழு நாட்கள் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். பிறகு நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகி துலாம் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். அதன் பிறகு டிசம்பர் 8–ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். இதன் விளைவாக சகோதரர்களோடு இருந்த சச்சரவுகள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பூர்வீகச் சொத்துகளால் வரவேண்டிய தொகை கிடைக்கும். ஜீவன ஸ்தானாதிபதியாகவும் புதன் விளங்குவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நேரம் இது. விருச்சிக ராசிக்குப் புதன் வந்ததும் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பணிகள் துரிதமாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி காலம்!

உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தன சப்தமாதிபதி சுக்ரன், நவம்பர் 30–ந் தேதி வக்ர நிவர்த்தியாகி சொந்த வீட்டில் பலம்பெறு கிறார். எனவே ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வங்கி களில் சேமிப்பு உயரும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களால் பலன் உண்டு.

குருவின் சஞ்சார நிலை!

தற்சமயம் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் குரு, மாதம் முழுவதும் அஸ்தமனம் பெற்று வலிமை இழந்திருக்கிறார். எனவே அதன் பார்வை பலம் திருப்திகரமாக இருக்காது. 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கும் குரு வலிமை இழக் கும் பொழுது, ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படத்தான் செய்யும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பும் வாய்ப்பும், சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகும். குரு வழிபாட்டை வியாழக்கிழமை தோறும் மேற்கொள்வது நல்லது.

இம்மாதம் பவுர்ணமி அன்று விரதமிருந்து, கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 17, 18, 23, 24, 26, 27, 28 டிசம்பர்: 9, 10, 11, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் பணப் பற்றாக்குறை அகலும். வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே என்றும், கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே என்றும் நினைத்தவர்களுக்கு புதிய திருப்பங்கள் உருவாகும். மேலதிகாரி கள் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்க முன்வரு வார்கள். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு இருக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப் படும். ஆரோக்கியத்தில் மட்டும் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினை ஏற்பட்டு அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். குரு அஸ்தமனத்தில் இருப்பதால் வியாழன் தோறும் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. மேலும் திருக்கார்த்திகை நாளில் கந்தனை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக மலரும்.

ரிஷபம்

இக்காலம் ஒரு பொற்காலம்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். நவம்பர் 30–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே மாதத்தின் தொடக்கம் முதல் பதிமூன்று நாட்களுக்கு கொஞ்சம் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியோடு செயல்படுங்கள். உறவினர்கள் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுக்ரன் வக்ர நிவர்த்திக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரப் போகிறது.

இந்த மாதம் முழுவதும் குரு பகவான் அஸ்தமனத்தில் இருக்கிறார். சமீபத்தில் பெயர்ச்சியான குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவேண்டும் அல்லவா? குருவின் சப்தம பார்வை வலிமை வாய்ந்தது என்பதால் மனக் குழப்பங்களை அகற்றும். மதிப்பும், மரியாதையும் உயரும். தன வரவைத் தாராள மாக்கும். தட்டுப்பாடுகளை அகற்றும் என்பது பொது விதி. அதேநேரத்தில் இம்மாதம் சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் குரு அஸ்தமனமாகி வலிமை இழக்கிறார். இதன் விளைவாக திடீர் மாற்றங்கள் உருவாகலாம். வரும் மாற்றங்கள் வளர்ச்சி தரும் மாற்றமாகவே இருக்கும்.

காரணம்.. உங்களுக்கு அஷ்டமாதிபதியாக விளங்குபவரும், உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமாக இருப்பவரும் குரு பகவான் தான். எனவே ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப விபரீத ராஜயோக அடிப்படையில் இம்மாதம் அற்புத பலன்களை அள்ளி வழங்கப்போகிறார். இதுவரை நீங்கள் செய்த முயற்சியில் பலன் கொடுக்காத சில காரியங்கள் இப்பொழுது நல்ல பலன்களை வழங்கப் போகிறது. வீடு வாங்கவேண்டும், வீடுகட்ட வேண்டும் என்று முயற்சி செய்தவர் களுக்கும், தொழிலை விரிவு செய்ய தொகை கிடைக்கவில்லையே என்று யோசித்தவர்களுக்கும் இப்பொழுது விருப்பங்கள் நிறைவேறி நல்ல திருப்பங்கள் காணப் போகிறார்கள்.

திருக்கார்த்திகை திருநாளில் அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று முறையாக முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். அதற்கு முதல் நாள் இல்லத்தில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் பலன்கள் அதிகம் கிடைக்கும்.

புதன் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு தன, பஞ்சமாதிபதியானவர் புதன். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருப்பதால், காரியங்கள் கடைசிநேரத்தில் கைகூடும். பணம் கொடுக்கல்–வாங்கல்களில் கவனம் தேவை. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துகளை பிரித்துக் கொள்வதில் தாமதம் ஏற்படும். நவம்பர் 24–ந் தேதி புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார். அதன்பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைகள் விலகும். தாமதங்கள் அகலும். மேலும் டிசம்பர் 8–ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் சென்றதும், புத–ஆதித்ய யோகம் செயல்படப் போகிறது. எனவே பொது வாழ்வில் புகழ் கூடும். பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் ஆதரவோடு, வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாதத் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். நவம்பர் 30–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகின்றார். எனவே அதன்பிறகு ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து அலைமோதும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். வாழ்க்கைத் துணை வழியே ஒற்றுமை பலப்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

குரு பகவானின் சஞ்சார நிலை!

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்க் கிறார். அதே நேரம் அவர் சூரியனோடு இணைந்து அஸ்தமனத்திலும் இருக்கிறார். அஷ்டமாதிபதி வலிமைஇழக்கும் பொழுது, வெளிநாட்டு யோகம் அல்லது வெளிமாநிலத்தில் பணிபுரியும் யோகம் வரலாம். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றமோ, இலாகா மாற்றமோ கிடைக்கலாம். குருவை முறையாக வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களைப் பெற இயலும்.

இம்மாதம் வரும் பரணி தீபத்தன்றும், திருக்கார்த்திகை அன்றும் வடிவேலனை வழிபட்டு வருவது நல்லது. சனிக்கிழமை அனுமன் வழிபாட்டின் மூலம் அல்லல் தீரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 19, 20, 26, 27, 30 டிசம்பர்: 1, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– வெளிர்பச்சை

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் தானாக ஒவ்வொன்றாக நடை பெறும். எதிர்பாராத விதத்தில் வீடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டாலும் கூட உடனுக்குடன் குணமாகி விடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி பெரும் தொகை ஒன்றைச் செலவிடுவீர்கள். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். டிசம்பர் 8–ந் தேதிக்கு மேல் தெய்வீகப் பயணங்கள் ஏற்படலாம். பிரதோ‌ஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

மிதுனம்

சுப காரியங்கள் கைகூடும் நேரம்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், சுக்ரனோடு இணைந்து புத–சுக்ர யோகத்தை உருவாக்குகிறார். இதனால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். எந்த லட்சியம் நிறைவேற வேண்டும் என்று நினைத்திருந்தீர்களோ அந்த லட்சியம் இப்பொழுது நிறைவேறும்.

உங்கள் ராசிநாதன் புதன் வக்ரமாக இருக்கிறாரே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். கேந்திராதிபத்யம் பெற்ற கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கும்பொழுது மிகுந்த நன்மைகளை வழங்கும் என்பது நியதி. எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் மிகச்சிறப்பாக இருக்கும். சந்திர–மங்கள யோகத்தோடு மாதம் பிறப்பதால் மங்கல ஓசை மனையில் கேட்கக்கூடிய வாய்ப்புகளும், மற்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சூழ் நிலைகளும் அமையப் போகிறது.

6–ல் சஞ்சரிக்கும் குரு, அஸ்தமனத்தில் இருப்பதால் மிகுந்த நற்பலன்களை வழங்குவார். 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருபகவான் வலிமை இழக்கும் போது, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற் படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகள் பலவிதமான சலுகைகளை வழங்க காத்திருப்பார்கள். பிணிகள் தீரும். பிரச்சினைகள் அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடுதலாக இருக்கும். இனிய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொள்ள இம்மாதத்தில் உலாவரும் கிரகநிலைகள் சாதகமாக விளங்குகிறது.

2–ல் ராகு, 8–ல் கேது இருப்பதால் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கிறது. எனவே நாகசாந்திப் பரிகாரங்களை செய்து கொண்டால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படாது. எதிரிகள் தொல்லை குறையும். புதிய பாதை புலப்படும். பூமி வாங்கும் யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்து சேரும். பொதுவாகவே இல்லத்தில் தினமும் மாலை நேரத்தில் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து வழிபடுவது நல்லது.

இம்மாதம் கார்த்திகை மாதம் என்பதால் பரணி தீபமும், திருக்கார்த்திகை தீபமும் வருகின்றது. அந்த நாட்களில் இல்லத்துப் படிகளிலும், பூஜையறையிலும் ஒற்றைப் படையில் அகல் விளக்கு ஏற்றிவைத்து வழிபடுவதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை எளிதில் வரவழைத்துக்கொள்ளலாம்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், சுக ஸ்தானம் எனப்படும் 4–ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் வக்ரம் பெற்றிருந்தாலும் சரி, பலம் பெற்றிருந்தாலும் சரி நற்பலன்களையே வழங்குவார். பிள்ளைகளுக்கான கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி, கல்யாண வாய்ப்புக் கருதி எடுத்த முயற்சி போன்றவற்றுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் வாங்கும் அமைப்பும், புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் உருவாகும். தங்கம், வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நவம்பர் 24–ந் தேதி புதன் வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு டிசம்பர் 8–ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். 6–ல் புதன் செல்கின்ற பொழுது ஜீவன ஸ்தானம் பலமடைகிறது. எனவே புதிய பொறுப்புகளும், பதவிகளும் கூட கிடைக்கலாம். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும் நேரமிது.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ர நிவர்த்தியான பிறகு நற் பலன்களையே வழங்குவார். நவம்பர் 30–ந் தேதி சுக்ரன் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே அதன்பிறகு இடமாற்றம், ஊர் மாற்றங்கள் எளிதில் வரலாம். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு வெளிநாட்டு யோகம் கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குருவின் சஞ்சார நிலை!

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சஞ்சரித்து அஸ்தமனம் பெறுகிறார். சூரிய னோடு இணைந்து வலிமை இழந்தாலும் கூட அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். மனத்தெளிவோடு காரியங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

இம்மாதம் சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து அனுமனை வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 17, 18, 21, 22, 28, 29 டிசம்பர்: 13, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– கரும்பச்சை

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புத–சுக்ர யோகமும், சந்திர–மங்கள யோகமும் இருப்பதால் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாராட்டும், புகழும் கூடும். இனத்தார் பகை மாறும். இல்லத்தாருடன் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இயலும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். பெற்றோர்களின் ஆதரவும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் இருந்த தாமதங்கள் அகலும். கடன்சுமை குறையப் புதிய வழி பிறக்கும். உங்கள் பெயரில் இடம், பூமி வாங்கும் யோகம் உருவாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். கார்த்திகைத் திருநாளில் விரதமிருந்து கந்தனை வழிபட்டால் சிந்தனைகள் வெற்றி பெறும்.

கடகம்

பட்டம்– பதவிகள் கிடைக்கும் நேரம்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. சூரியனுடன் குரு இணைந்திருப்பதால் அதன் வலிமை கொஞ்சம் குறைகிறது. அஸ்தமனத்தில் இருந்து பார்த்தாலும் குருவின் பார்வைக்கு ஓரளவு பலன் உண்டல்லவா? அதனால் தன்னம்பிக்கையோடு செயல்படுவது முக்கியம். குருவை முறையாக வழிபடுவதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அஷ்டமத்தில் செவ்வாயும், சந்திரனும் இருப்பதால் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் மட்டுமின்றி வாகன மாற்றமும் உருவாகும் நேரம் இது. வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் முன் சுய ஜாதகத்தை ஒரு முறை ஆராய்ந்து பார்த்துக்கொள்வது நல்லது. இல்லையேல் ராகு–கேது பெயர்ச்சி வரை கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம்.

தற்சமயம் 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதி 6–ல் உலாவரும் பொழுது சங்கடங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் எதிர்பாராத விதத்தில் சில நல்ல காரியங்கள் நடைபெறும். ஜீவன ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டுப் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் திட்டங்கள் நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வெளிநாட்டுக் கனவு நிறைவேற வாய்ப்பு உருவாகும்.

இம்மாதம் உங்களுக்கு யோகம் தரும் கிரகமாக விளங்கும் செவ்வாய்க்குரிய தெய்வமான முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும். ஆகையால் திருக்கார்த்திகை அன்று முருகனை வழிபட்டால் அனைத்து யோகங்களும் வந்துசேரும்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

நவம்பர் 24–ந் தேதி புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம், விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் புதன். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சி, மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்தும் வாய்ப்பு, ஆபரணசேர்க்கை போன்றவை நடைபெறும். டிசம்பர் 8–ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். பஞ்சம ஸ்தானத்திற்கு புதன் செல்லும் பொழுது பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக அல்லது உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் அகலும். வங்கி சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் அகல வழிபிறக்கும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி!

உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மாதத்தொடக்கத்தில் வக்ர நிலையில் இருக்கிறார். நவம்பர் 30–ந் தேதி வக்ர நிவர்த்தியாகி, துலாம் ராசியில் பலம் பெறுகிறார். எனவே தாய்வழி ஆதரவு கிடைக்கும். பங்காளிப் பகை மாறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் தொலைபேசி வழித் தகவல் அனுகூலமானதாக அமையும். பெரிய மனிதர்களின் தொடர்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரலாம்.

குருவின் சஞ்சார நிலை!

குரு பகவான் 5–ம் இடத்தில் சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசியையும் பார்க்கிறார்; 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். எனவே எதிர்பாராத தனலாபம் கிடைக்கலாம். எப்பொழுதோ கொடுத்த தொகை இப்போது வசூலாகும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் கூடுதலாகவே ஆதாயம் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டு வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 3, 4, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– வைலட்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

சுபச்செலவுகள் அதிகரிக்கும் மாதம் இது. கணவன்– மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர். மாதத் தொடக்கத்தில் பிள்ளைகளால் கொஞ்சம் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். தாய்வழி ஒத்துழைப்பும் உடன்பிறப்பு களின் ஆதரவும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைப்பது அரிது. பணிபுரியும் பெண்களுக்கு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஒரு சிலருக்கு விரும்பத்தகாத இட மாற்றங்கள் வந்துசேரும். வாகனம் வாங்கும் முயற்சி தாமதமாகும். குரு பலம் பெற்று சஞ்சரிக்கும் வரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாழன் தோறும் விரதம் இருப்பதன் மூலமும், திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபடுவதன் மூலமும் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

சிம்மம்

யோகமான நேரம் இது!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இதுவரை நீச்சமாக இருந்த உங்கள் ராசிநாதன் சூரியன், இப்பொழுது விருச்சிக ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். சுக ஸ்தானத்தில் குருவோடு இணைந்து ராசிநாதன் சஞ் சரிக்கும் பொழுது, தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். தனவரவில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொழிலுக்கு மூலதனம் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள்.

அஷ்டமாதிபதி குரு, அஸ்தமனம் பெற்று இடம், பூமியை குறிக்கும் 4–ம் இடத்தில் இருப்பது நன்மைதான். வாங்கிப் போட்ட இடம் விற்கவில்லையே என்று கவலைப்பட்டவர்கள், விற்ற இடத்திற்கு பணம் வரவில்லையே என்று வேதனைப்பட்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி காணும் விதமாக எண்ணங்கள் ஈடேறப்போகிறது. என்றாலும் சூரியன், குரு ஆகிய இரண்டிற்கும் உரிய சிறப்பு வழி பாடுகளை குருவிற்குரிய நட்சத்திரம் அமைந்த நாட்களில் செய்து வருவது நல்லது.

சகாய ஸ்தானத்தில் சுக்ரன்– புதன் சேர்க்கை இருப்பதால் புத– சுக்ர யோகம் செயல்படுகிறது. இதுபோன்ற காலங்களில் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பார்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், கல்யாண நிகழ்வுகள் திடீரென முடிவாகும். புத– சுக்ர யோகம் பொருள் வரவை கொடுக்க அஷ்டலட்சுமி வழிபாட்டை அனுதினமும் செய்வது நல்லது. செவ்வாய் தற்சமயம் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கிறார். யோகம் தரும் கிரகம் செவ்வாய் என்பதால் அதற்குரிய அங்காரக வழிபாட்டை மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.

அங்காரக வழிபாட்டின் பலனாக பகை பாராட்டியவர்கள் பாசம் காட்டுவர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரால் ஆதாயம் கிடைக்கும். இம் மாதம் பரணிதீபமும், திருக்கார்த்திகை தீபமும் வருகின்றது. அன்றைய தினம் இல்லத்தில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கேற்றி வழிபடுவதோடு, ஆறுபடை வீடுகளில் அருகில் உள்ள படை வீட்டிற்கு சென்றுவழிபட்டு வந்தால் வளர்ச்சி கூடும்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியானவர் புதன். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு இணைந்திருக்கும் சுக்ரனும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். நவம்பர் 24–ந் தேதி புதன் நிவர்த்தியாகிறார். பின்னர் டிசம்பர் 8–ந் தேதி விருச்சிகத்திற்குச் செல்கிறார். வக்ர நிவர்த்தியான பிறகு புதன் மிகுந்த நற்பலன்களை உங்களுக்கு வழங்குவார். குறிப்பாக பணவரவை அதிகப்படுத்துவார். பாதியில் நின்ற பணிகளை வேகமாக நடைபெற வழிவகுப்பார். மனக்கசப்புகள் மாறும். பெண்களால் பெருமை சேரும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்தில் வக்ரம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல தொழில் ஸ்தானத்திற்கும் அவரே அதிபதியாகின்றார். நவம்பர் 30–ந் தேதி சுக்ரன் வக்ர நிவர்த்தியான பிறகு, நல்ல பலன்களை வாரி வழங்குவார். எனவே உங்கள் எண்ணங்கள் ஈடேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வழக்குகள் சுமுகமாக முடியும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

குருவின் சஞ்சார நிலை

குரு பகவான் உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். அவர் இம்மாதம் முழுவதும் அஸ்தமனத்தில் இருப்பதால் முடியாத சில பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பற்றாக்குறை அகலும். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். மக்கள் செல்வங்களின் முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பல நாட்களாக தள்ளிப்போன தொகை எளிதில் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். பயணங்களால் பலன் கிடைக்கும் நேரம் இது.

இம்மாதம் வியாழன் தோறும் குரு வழிபாட்டையும், வெள்ளி தோறும் மகாலட்சுமி வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 21, 22, 26, 27 டிசம்பர்: 2, 3, 5, 6, 7

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ரோஸ்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதம் இதுவாகும். புத–சுக்ர யோகம் இருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பூமியாலும் லாபம் உண்டு; புதல்வர்களாலும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். தனலாபாதிபதியான புதன் வக்ர நிவர்த்தியான பிறகு வளர்ச்சி அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தாய்வழி ஆதரவு ஓரளவே கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளின் சுப காரியப்பேச்சுகள் முடிவாகும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. தங்கு தடைகள் அகல சிவன் வழிபாட்டையும், குரு வழிபாட்டையும், குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

கன்னி

நவம்பர் 24–க்கு மேல் நல்ல நேரம்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்ற கிரகம் வக்ரமடைவது நன்மைதான். என்றாலும் உங்கள் ராசி நாதனாக புதன் விளங்குவதால், மாதத் தொடக்கத்தில் ஆரோக்கிய தொல்லைகளும், பற்றாக்குறை பட்ஜெட்டும் உருவாகும். நவம்பர் 24–ந் தேதி புதன் வக்ர நிவர்த்தி ஆன பிறகு வளர்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்–வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடிவந்து முன்னேற்றத்திற்கு வித்திடுவார்கள்.

அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், கடந்த சில மாதங்களாகவே, தொழிலில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகவில்லையே என்றும், நீண்ட நாள் நோய் இருப்பவர்கள் இதுவரை வைத்தியம் பார்த்தும் நோய் அகலவில்லையே என்றும், இன்னும் சிலர் குடும்பச் சுமை கூடுதலாக இருக் கிறதே என்றும் கவலைப்பட்டிருப்பீர்கள். அதற்கெல்லாம் விடைகூறும் விதத்தில் இம்மாதம் புத–சுக்ர யோகம் செயல்படப் போகின்றது. குருவின் அஸ்தமன சஞ்சாரமும் கைகொடுக்கப் போகிறது.

இந்த கால கட்டங்களில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையானஅத்தியாவசியப்பொருட்களையும், ஆடம்பரப்பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். மண், பூமிசேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மனைகட்டிக் குடியேறவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் கவலைப்பட்டவர்கள் இப்பொழுது வீடு வாங்கும் வாய்ப்புக் கைகூடும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்க காலத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எனவே இதுபோன்ற காலங்களில் வீடு, நிலம் வாங்குவதற்கு வங்கி களிலோ, அல்லது பணிபுரியும் இடத்திலோ கடனுதவி கிடைக்கும். பெண் குழந்தைகளின் கல்யாண வாய்ப்புகளும் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

மேற்குப் பார்த்த சவுபாக்கிய துர்க்கையை வழிபடுவதோடு, வாரம் தோறும் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரையும் வழிபட்டு வருவது நல்லது. ராமஜெயம் எழுதுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். இம்மாதம் திருக்கார்த்திகை திருநாள் வருவதால் அன்றைய தினம் வள்ளி மணாளனுக்கு வாகை மாலை சூட்டி வழிபடுங்கள்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

இம்மாதம் உங்கள் ராசிநாதன் புதன் வக்ரத்தோடு சஞ்சரிக்கிறார். ஆனால் மாதம் தொடங்கி ஒருவாரம் கழித்து நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு டிசம்பர் 8–ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். புதன் பலம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது, எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடிவரும். தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும். ஊக்கமும், உற்சாகமும் உள்ளத்தில் குடிகொள்ளும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமல்ல, வள்ளல்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் ஒன்றையும் செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தனாதிபதி வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் தசாபுத்தி பலமிழந்தவர்களுக்கு தனவரவில் தடைகள் ஏற்படலாம். கடன், கைமாற்று வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஆபரணங்களை அடகு வைக்கும் அமைப்பும் ஒருசிலருக்கு உண்டு. நவம்பர் 30–ந் தேதி சுக்ரன், வக்ர நிவர்த்தியாகிறார். அதன்பிறகே இழப்புகளை ஈடு செய்யும் வாய்ப்பு கூடிவரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு உண்டு.

குருவின் சஞ்சார நிலை!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 7–க்கு அதிபதியானவர். அவர் அஸ்தமனத்தில் இருக்கும் பொழுது நற் பலன்களை அள்ளிக் கொடுப்பார். கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்ற கிரகம் என்பதால், வலிமை இழக்கும் பொழுதெல்லாம் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். சூரியனோடு குரு இணைந்திருப்பதால் விரயத்திற்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டே இருக்கும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பும் விதத்தில் அமையும். அதிகார வர்க்கத்தினர் ஆதரவோடு எதிர்கால நலன்கருதி புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை முறையாக மேற்கொள்வதோடு புத–சுக்ர யோகம் செயல்பட மகாலட்சுமி சமேத விஷ்ணுவை வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 23, 24, 28, 29 டிசம்பர்: 4, 5, 9, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய வாய்ப்புகள் வந்துகொண்டேயிருக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஒரு சில நல்ல வாய்ப்பு கள் கைநழுவிச் செல்லலாம். இருப்பினும் புத–சுக்ர யோகம் இருப்பதால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. குடும்பச் சுமை கூடும். அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவதற்கு அதிகம் செலவிடுவீர்கள். உடன்பிறப்புகள் மற்றும் தாயின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். முன் கோபத்தால் உறவு பகையாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் பிரச்சினைகள் தலைதூக்கலாம். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். சனிக்கிழமை விரதமும், ஆனைமுகப்பெருமான் வழிபாடும் சஞ்சலம் தீர்க்கும்.

துலாம்

தேவைகள் பூர்த்தியாகும்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும் வக்ர இயக்கத்தோடு இணைந்து உலா வருகிறார். புதனும், சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால் புத–சுக்ர யோகம் உருவாகிறது. எனவே பூமி வாங்கும் யோகம், பொருளாதார உயர்வு, புதிய முயற்சிகளில் வெற்றி போன்றவை தேடி வரும் நேரம் இது. ஆனால் இரண்டு கிரகங்களும் வக்ர இயக்கத்தில் இருப்பதால், அவையெல்லாம் கொஞ்சம் தாமதமாகலாம். புதன், சுக்ரன் வக்ர நிவர்த்திக்குப் பிறகு, படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.

2–ம் இடத்தில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். அவரோடு 3, 6–க்கு அதிபதியான குருவும் இணைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். வழக்குகளும், வாய்தாக்களும் தசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு வந்துசேரும்.

‘துலாத்தோன் எவ்விடத்தும் துவளான்’ என்பது பழமொழி. நீங்கள் துவண்டு போக மாட்டீர்கள். பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள். இம்மாதம் சுக ஸ்தானத்தில் கேதுவும், 10–ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகோதர ஸ்தானத்தில் சனி பகவான் வீற்றிருக்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் பூர்வீகச் சொத்துத் தகராறுகள் அகலும். புதிய திருப்பங்கள் உருவாகும். வீண் பழிகள் உங்களை விட்டு அகல நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு திருப்தி அளிக்காது. உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு திடீர் இட மாற்றங்களோ, இலாகா மாற்றங்களோ உருவாகலாம்.

இம்மாதம் முழுவதும் குரு பகவான் அஸ்தமனத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகவான் பகை கிரகமாவார். அவர் அஸ்தமனம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது, நடைபெறாத சில காரியங்கள் கூட நடைபெறும். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப குருவின் சஞ்சார நிலை இருப்பதால், வியாழன் தோறும் குருபகவானை வழிபடுவதோடு வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர பகவானையும் வழிபட்டால் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும்.

இம்மாதம் திருக்கார்த்திகை தீபம் வருவதால் இல்லத்திலும், ஆலயங்களிலும் தீபம் ஏற்றி வைத்து, முருகப்பெருமான் சன்னிதியில் கவசம் பாடி வழிபட்டால் காரியத் தடைகள் அகலும்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு டிசம்பர் 8–ந் தேதி விருச்சிகத்திற்குச் செல்கிறார். இதன் விளைவாக மனக் குழப்பங்கள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களோடு வந்திணைய ஆர்வம் காட்டுவர். நிதிப் பற்றாக்குறை அகலும். கட்டிடம் கட்டும் முயற்சி அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் இப்பொழுது கிடைக்கலாம். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

இக்காலம் ஒரு பொற்காலமாகும். சுக்ரனின் வக்ர இயக்கத்தோடு இம்மாதம் தொடங்கினாலும், நவம்பர் 30–ந் தேதி அவர் வக்ர நிவர்த்தியாகிறார். ராசிநாதன் சுக்ரன் பலம்பெறும் இந்தநேரத்தில் உங்கள் பணத்தேவை பூர்த்தியாகும். பாராட்டும், புகழும் கூடும். வியாபாரம் வெற்றி நடைபோடும். மனதளவில் நினைத்ததை மறு கணமே செய்து முடிப்பீர்கள். தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குருவின் சஞ்சார நிலை!

குரு பகவான் மாதத் தொடக்கத்தில் இருந்து மாதம் முடியும் வரை அஸ்தமன நிலையில் இருக்கிறார். இருப்பினும் அவர் லாபாதிபதி சூரியனுடன் இணைந்து, தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழிப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டு. எதிரிகள் பலம் குறையும் இந்த நேரத்தில், உங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றிபெறும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு 3, 6–க்கு அதிபதி. சகோதர ஸ்தானாதிபதி வலிமை இழக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் குணம் மாறலாம். புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

இம்மாதம் துர்க்கை, காளி போன்ற தெய்வங்களை வழிபடுவதன் மூலம் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 26, 27, 30 டிசம்பர்: 1, 5, 6, 7, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– கிரே.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் – மனைவிக்குள் கனிவு கூடும். மனம் ஒன்றிச் செயல்பட்டு மாற்றுக் கருத்துடையோரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுக்ரன் வக்ர நிவர்த்தியானதும் கல்யாணக் கனவுகள் நனவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நெருங்கிய சொந்தங்கள் உங்கள் நிகழ்காலத் தேவையைப் பூர்த்தி செய்ய முன்வருவர். தட்டிச் சென்ற வாய்ப்புகள் தானாக வந்துசேரும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். வாகன யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பகை மாறும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். பிரதோ‌ஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

விருச்சிகம்

தனவரவு தாராளமாக வந்து சேரும்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன பஞ்சமாதிபதியான குருவோடு இணைந்து உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே இம்மாதம் இனிய மாதமாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு தனக்கென ஒரு தனி முத்திரை பதிப்பீர்கள்.

தனாதிபதி குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பணவரவு அதிகரிக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும். செய்தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளில் பாகப்பிரிவினையாகி அதன் மூலமும் ஒரு பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கலாம். அவற்றைக் கொண்டு ஒருபுதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நடக்கும் தொழிலில் கிளைத் தொழில் தொடங்கும் முயற்சியும் கைகூடும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பணிநிரந்தரம், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் நேரம் இது. வளர்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் சொத்துகள் வாங்கும் முயற்சியிலும் சொந்தங் களுக்கு கொடுத்து உதவும் முயற்சியிலும் ஆர்வம் காட்டு வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதித் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். துணிச்சலான சில முடிவுகளை எடுத்து அருகில் இருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்து வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

புதன் வக்ரம், சுக்ரன் வக்ரம், குரு அஸ்தமனம் ஆகியவற்றோடு பிறக்கும் இம்மாதத்தில் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாணச் சீர்வரிசைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் அனைத்தும் கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கூட கிடைக்கலாம். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருவழிபாட்டை மேற்கொண்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதன் கிழமை தோறும் பெருமாளை வழிபடுவதன் மூலம் புதிய பாதை புலப்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அனுமனை வழிபடுவதன் மூலம் செய்த முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். மேலும் இம்மாதம் பரணி தீபமும், கார்த்திகைத் திருநாளும் வருகிறது. அன்றைய தினம் இல்லத்திலும், ஆலயத்திலும் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்லலாம்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். அதன்பிறகு டிசம்பர் 8–ந் தேதி விருச்சிகத்திற்குச் செல்கிறார். இதன் விளைவாகப் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தேகநலன் சீராகும். உங்களின் திறமை பளிச்சிடும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நவம்பர் 30–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். அப்போது புத–சுக்ரயோகம் செயல் படுகிறது. எனவே பொன், பொருள் வாங்கும் முயற்சியும், சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உருவாகும். வெளிநாடு செல்லும் முயற்சி எண்ணியபடி கைகூடும். ஒருசிலருக்கு வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். தாய் மற்றும் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். கல்விக்காகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும் நேரம் இது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

குருவின் சஞ்சார நிலை!

உங்கள் ராசிக்கு தன, பஞ்சமாதிபதியான குரு பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அதோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம் கூடும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அதே சமயத்தில் குரு அஸ்தமனத்திலும் இருக்கிறார். எனவே மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். உற்றார், உறவினர்களை மட்டுமல்லாமல் நண்பர்களையும் அனுசரித்துச்செல்ல வேண்டிய நேரம் இது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

இம்மாதம் ஞாயிறு தோறும் விநாயகப்பெருமானையும் வியாழ பகவானையும், சூரிய பகவானையும் ஒருசேர வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

நவம்பர்: 17, 18, 27, 28, 29 டிசம்பர்: 1, 2, 3, 9, 11 ,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– சிவப்பு.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

தொட்டது துலங்கும் மாதம் இது. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாசம் மிகுந்த உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. சுக்ரனின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். புதியதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு உத்தியோகத்தில் உயர்வும், ஊதியத்தில் உயர்வும் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடும், குரு வழிபாடும் நன்மையை வழங்கும்.

தனுசு

கவனமுடன் செயல்பட வேண்டிய நேரம்!

விளம்பி வருடம் கார்த்திகை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அஸ்தமனம் பெற்றும் இருக்கிறார். மேலும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கமும் உங்களுக்கு நடைபெறுகிறது. எனவே எதிர்பார்ப்புகள் நடைபெறுவதில் கொஞ்சம் தாமதங்கள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் விலகுவதற்கு, முறையான பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

2–ல் கேது இருப்பதால் பிரச்சினைகள் முடிவடைந்தது போல இருந்து, மீண்டும் தலைதூக்கக்கூடும். ராகு – கேதுக்கள் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதால், உங்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை வரும். எதிர்பார்த்த காரியங்கள் நடப்பதில் தாமதம் ஏற்படும். இருப்பினும் உங்கள் ராசிநாதன் குரு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும். ராகு–கேது பெயர்ச்சி வரை எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.

இம்மாதம் முழுவதும் உங்கள் ராசிநாதனாகவும், சுகாதிபதியாகவும் இருக்கும் குருபகவான், சூரியனோடு இணைந்து அஸ்தமனத்தில் சஞ்சரிக்கிறார். எனவே உங்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் குறையலாம். கைகொடுத்து உதவுவதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கலாம். ஆரோக்கியத் தொல்லைகளும் உண்டு. வீண் விரயங்களும் உண்டு. பிறருக்கு பொறுப்புச் சொல்வதன் மூலம் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் புதனும், சுக்ரனும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்கள். புத–சுக்ர யோகம் செயல்பட்டாலும் அது வலிமை இழந்திருப்பதால், தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை. உறவினர்கள் உங்களுக்குப் பகையாக மாறலாம். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கலாம். வீடு, வாகனம் பராமரிப்புச் செலவுகளில் ஆர்வம் காட்டுங்கள். வியாழன் வலிமை இழந்திருப்பதால் குரு பீடங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

இம்மாதம் திருக்கார்த்திகை வருவதால், கவசம் பாடி கந்தப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்ற கிரகம் வக்ர நிலையில் யோகத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்குமென்றே சொல்லலாம். மனைவி, மக்கள் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். பாக்கிகளும் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஆபரணம், வாகனம், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவீர்கள். டிசம்பர் 8–ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் செல்கிறார். அதன்பிறகு ஒருசிலருக்கு இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் உருவாகலாம்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு சுக்ரன் அதிபதியாகிறார். அந்தச் சுக்ரன் நவம்பர் 30–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். லாபாதிபதி பலம்பெறும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்திற்காக முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைக்கும். ஒரு சிலருக்கு பணி நிரந்தரம் ஆகி மகிழ்ச்சிப்படுத்தும். சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு இப்பொழுது அழைப்புகள் வந்து ஆச்சரியப்படுத்தும்.

குருவின் சஞ்சாரம் நிலை!

குரு பகவான் மாதத் தொடக்கம் முதல் அஸ்தமனத்திலேயே இருக்கிறார். கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்ற கிரகம் என்பதால் அஸ்தமனம் நன்மைதான் என்றாலும், உங்களின் ராசிநாதனாகவும் குரு விளங்குவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களின் உதவி குறையும். பிள்ளைகளால் பிரச்சினை வந்து மனநிம்மதியை குறைக்கும். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. குறிப்பாக இதுபோன்ற காலங்களில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

இம்மாதம் வியாழன் தோறும் விரதமிருந்து தென்முகக் கடவுளை இன்முகத்தோடு வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 1, 2, 4, 5

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பொன்நிற மஞ்சள்

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் விரய குருவின் ஆதிக்கத்தால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் ஏற்படலாம். குரு அஸ்தமனத்தில் இருப்பதால், எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. இல்லம் தேடி நல்ல தகவல் வர குரு வழிபாட்டை மேற்கொள்வது அவசியம். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே விருப்பங்கள் நிறை வேறும். பிள்ளைகளால் வரும் துன்பங்களை சமாளிப்பீர்கள். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்காது. சகோதர வர்க்கத்தினரின் உதவியும் ஓரளவே கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வீண்விவாதங்களை விலக்குவது நல்லது. சக பணியாளர்களிடம் உங்கள் பொறுப்புகளை ஒப்படைத்தால், அது நிறைவடையாமல் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். சனிக்கிழமை தோறும் விநாயகர், ஆஞ்சநேயர், சனீஸ்வரர் ஆகிய மூன்று தெய்வங்களையும் முறையாக வழிபடுங்கள்.

மகரம்

வரவும்–செலவும் சமமாகும்!

விளம்பி வருடம் கார்த்திகை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டினால், வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். ஆனால் அதே நேரம் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக் கிறார். சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விரயத்திற்கேற்ற லாபம் வந்துகொண்டேயிருக்கும். எனவே வரவும், செலவும் சமமாகும் மாதமாகவே இம் மாதத்தைக் கருதலாம்.

மாதத் தொடக்கத்தில் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் முன்கோபம் அதிகரிக்கலாம். கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை ஒருசிலர் இழக்க நேரிடும். எனவே முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வழிபாடுகள் மூலமே வளர்ச்சிஅடைய முடியும் என்பதை அனுபவத்தில் தான் கண்டு கொள்வீர்கள். சப்தம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும்.

என்ன இருந்தாலும் உங்கள் ராசிக்கு ராகு–கேதுக் களின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் வந்து கொண்டேயிருக்கும். ஒருநாள் மெத்தையில் புரள்வீர்கள். மறுநாள் பாயில் புரள்வீர்கள். ஒருநாள் சந்தோ‌ஷங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். மறுநாள் சங்கடங்கள் துரத்திக் கொண்டேயிருக்கும். எனவே நிரந்தரமான யோகம் உங்களுக்கு ஏற்பட யோகபலம் பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. மாதத் தொடக்கத்தில் தொழில் ஸ்தானத்தில் புதனும், சுக்ரனும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்கள். எனவே தொழில் ஸ்தானத்தில் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வாய்ப்புகள் வருவதுபோல் வந்து கைநழுவிச் செல்லலாம். சுக்ர பிரீதி செய்துகொள்வது நல்லது.

இம்மாதம் பரணி தீபமும், திருக்கார்த்திகை திருநாளும் வருகின்றது. அன்றைய தினங்களில் கவசம் பாடி கார்த்தி கேயனை வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

மாதத் தொடக்கத்தில் புதன் தொழில் ஸ்தானத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். பிறகு டிசம்பர் 8–ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். இந்த அமைப்பால் தொழில் புரிபவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். தொழிலை விரிவு செய்ய விரும்புபவர்களுக்கு அதற்குரிய மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். புத–ஆதித்ய யோகம் செயல்படுவதால் நெருங்கிய உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு சுயதொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு அது கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் வக்ரம் பெற்றிருப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். தொழில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். நவம்பர் 30–ந் தேதி சுக்ரன் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே அதன்பிறகு படிப்படியான முன்னேற்றங்கள் வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பாகப்பிரிவினையில் கேட்ட பகுதி கிடைக்கும். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். ஆபரணங்கள் வாங்குவதில் அதிக நாட்டம் செல்லும்.

குருவின் சஞ்சார நிலை!

மாதத் தொடக்கத்திலிருந்தே குருபகவான் அஸ்த மனத்தில் இருக்கிறார். ஆனால் உங்களைப் பொறுத்தவரை இந்த அஸ்தமனம் வாழ்க்கைக்கு உதயமாக மாறும். காரணம் அஷ்டமாதிபதி சூரியனும், விரயாதிபதி குருவும் இணைந்திருப்பதால் விபரீத ராஜயோக அடிப்படையில் அபரிமிதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. வெளிநாட்டு அழைப்புகள் வந்து ஆச்சரியப்படுத்தும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் விலகும். வீண்பழிகள் அகலும். புதிய முயற்சிகளில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு வெற்றி கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

நவம்பர்: 17, 18, 21, 22 டிசம்பர்: 2, 3, 5, 6, 7, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– கருநீலம்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

நீங்கள் செய்யும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் மாதம் இது. கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்ப உறுப்பினர்கள், உங்களின் முன்னேற்றத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள். உங்கள் பெயரிலேயே வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி திட்டங்கள் தீட்டி முடிவெடுப்பீர்கள். சுக்ரனின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறு துணையாக இருப்பார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவோடு விரும்பிய இலாகா மாற்றங்களைப் பெறுவீர்கள். குரு பகவான் வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

கும்பம்

தொழில் வளர்ச்சி கூடும் நேரம்!

விளம்பி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால் அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் முன்னேற்றம் ஏற்படும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் 10–ல் குரு வந்திருப்பதால் பதவிகளில் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று நீங்கள் நினைக்கலாம். குரு பகவான் இந்த மாதம் முழுவதும் அஸ்தமனத்தில் இருக்கிறார். எனவே எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பொறுப்புகள் தானாக வந்து சேரும். செல்வாக்கு உயரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

6–ல் ராகு அமர்ந்து குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் உருவாகும். எனவே நீங்கள் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், அதில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். வங்கிகளிலும் கடனுதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு தொலைபேசி வழியாக நல்ல தகவல் வந்து சேரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் அருகிலிருந்து உதவிசெய்வர்.

சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஒருசில சமயங்களில் சஞ்சலங்களும், சந்தோ‌ஷங்களும் மாறி மாறி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. சனி, செவ்வாயைப் பார்ப்பதால் நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறப்புகளின் குணம் திடீரென மாறும். சொத்துகளால் பிரச்சினைகளும், சொத்துப்பதிவில் தாமதங்களும் இருக்கும். புதிய சொத்துகள் வாங்குபவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது.

12–ல் கேது இருப்பதால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். அதுமட்டுமல்லாமல் ராசிநாதன் சனியால் நன்மை ஏற்பட சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபட்டு வருவது உத்தமம்.

இம்மாதம் பரணி தீபமும், திருக்கார்த்திகை தீபமும் வருகின்றது. எனவே அன்றைய தினங்களில் கவசம் பாடி கந்தப்பெருமானை வழிபடுவதோடு, இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டால் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும்.

புதனின் வக்ர நிவர்த்தியும், பெயர்ச்சியும்!

உங்கள் ராசிக்கு புதன் பஞ்சம அஷ்டமாதிபதியானவர். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருக் கிறார். நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகி துலாத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல பலன்களையே ஏராளமாக நடைபெற வழிவகுப்பார். சுக்ரனோடு இணைந்து புத–சுக்ர யோகத்தையும் உருவாக்குவதால் ஆடை, ஆபரணங்கள் வாங்கும் அமைப்பு உண்டு. அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். டிசம்பர் 8–ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் செல்கிறார். அப்பொழுது புத ஆதித்ய யோகம் உருவாகின்றது. பெற்றோர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமைப் பதவி வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

நவம்பர் 30–ந் தேதி சுக்ரன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 9–க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ர நிவர்த்தியான பிறகு வீடு கட்டும் முயற்சி அல்லது வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். வியாபார விரோதங்கள் விலகும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். நெடுந்தூரப் பயணங்களால் நெஞ்சம் மகிழும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் எல்லாம் கைகூடிவரும் நேரம் இது.

குருவின் சஞ்சார நிலை!

மாதத் தொடக்கத்தில் 10–ல் சஞ்சரிக்கும் குரு பகவான் பலமிழந்து அஸ்தமனத்தோடு சஞ்சரிக்கிறார். சப்தமாதிபதி சூரியனுடன் குரு இருப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடல்தாண்டி வரும் செய்தி காதினிக்கச் செய்யும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தன லாபாதிபதியான குரு அஸ்தமனம் பெறுவதால் பணப்புழக்கத்தில் மட்டும் கொஞ்சம் தடை ஏற்படும். இருந்தாலும் தன்னம்பிக்கை அதிகம் பெற்ற நீங்கள் எதையும் சமாளிப்பீர்கள். இதுபோன்ற காலங்களில் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, குரு பீடங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானையும், வியாழன் தோறும் குரு பகவானையும் வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 10, 19, 23, 24, டிசம்பர்: 2, 3, 9, 10, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ஆரஞ்சு

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் உங்கள் ராசிநாதன் சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால், பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தாய்வழி ஆதரவும், சகோதரர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். இடம், வீடு வாங்க நினைத்தவர்களுக்கு அது கைகூடும். கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். சுக்ரனின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு பெற்றோர் வழியில் வரவு உண்டு. பெண் பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். திருக்கார்த்திகைத் திருநாளில் முறையாக முருகப்பெருமானை வழிபடுவதோடு, யோகபலம் பெற்ற நாளில் வராகி அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் பணியில் இருந்த தொய்வு அகலும். எதிர்பார்த்தபடி முன்னேற்றம் வந்து சேரும்.

மீனம்

மங்கல ஓசை மனையில் கேட்கும்!

விளம்பி வருடம் கார்த்திகை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியையேப் பார்க் கிறார். எனவே நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நடக்கும் செயல்களில் திருப்தி ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள்.

புதனும், சுக்ரனும் மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் மறைந்து சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை தீர்ந்து, தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டேயிருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். இந்த நேரத்தில் திருமண முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். பெற்றோர்களின் மணிவிழா, முத்து விழாக்களுக்கும், கடைதிறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழாக்களுக்குமான அறிகுறிகள் தென்படும்.

9–ம் இடத்தில் பிதுர்காரகன் சூரியனோடு, குரு சஞ் சரிப்பதால் தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். பூர்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட பஞ்சாயத்துகள், இதுவரை இழுபறி நிலையில் இருந்திருக்கலாம். அந்த நிலை இனி மாறும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு உரிய விதத்தில் வந்து சேரும். அதைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியிலும் ஒருசிலர் ஆர்வம் காட்டுவார்கள். விரய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் சொத்து விற்பனையால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

10–ல் சனி இருப்பதால் கர்ம ஸ்தானம் பலப்படுகிறது. எனவே பெற்றோர்களின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. திடீர் பிரச்சினைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை கிடைக்காத சம்பள உயர்வு இப்பொழுது கிடைக்கும். தலைமைப் பொறுப்புகள் கூடத் தானாக வந்து சேரலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பணி உயர்வின் காரணமாக ஒருசிலருக்கு நீண்டதூரப் பயணங்களும், பிற மாநிலங்களுக்குச் செல்லும் அமைப்பும் உருவாகலாம்.

இம்மாதம் திருக்கார்த்திகை திருநாள் வருவதால், தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பாவங்கள் விலகும். பணவரவும் திருப்தி தரும்.

புதனின் வக்ர நிவர்த்திக் காலம்!

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4, 7–க்கு அதிபதியான புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 24–ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். அதன்பிறகு டிசம்பர் 8–ந் தேதி விருச்சிகத்திற்கு செல்கிறார். 4–க்கு அதிபதி புதன் 9–ம் இடத்திற்கு வரும் பொழுது பொன், பொருட்கள் சேர்க்கை ஏற்படும். புதிய பாதை புலப்படும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் நேரம் இது. எனவே உங்களின் குறைகளைப் போக்கிக் கொள்ள சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்திக் காலம்!

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்.

உங்கள் ராசிநாதன் வியாழனுக்கு சுக்ரன் பகை கிரகம் என்பதால் இந்த வக்ர காலத்தில் நீங்கள் செய்யும் முயற்சி களில் வெற்றி கிடைக்கும். வாங்கல்–கொடுக்கல்களில் இருந்த கடன் சுமை குறையும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். பெண்கள் வழியில் ஏற்பட்ட மனக்குழப்பம் அகலும். தங்கு தடைகள் தானாக விலகும். நவம்பர் 30–ந் தேதி சுக்ரன் வக்ர நிவர்த்தியாகிறார். அந்த நேரத்தில் தொழிலில் சிலரின் குறுக்கீடுகள் வரலாம். பொறுப்புகளை யாரிடமாவது ஒப்படைத்தால், அது நடைபெறாமல் உங்களிடமே திரும்பி வரும். விரயங்கள் கூடும். பக்கத்து வீட்டில் மட்டுமல்ல, பழகும் நண்பர்கள் வழியிலும் பகை அதிகரிக்கும். மன அமைதி குறையாதிருக்க சுய ஜாதகப்படி நடக்கும் தசாபுத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளையும், பரிகாரங்களையும் முறையாகச் செய்வது நல்லது.

குருவின் சஞ்சார நிலை!

குரு பகவான் மாதத் தொடக்கம் முதல் மாதம் முழுவதும் சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாக சஞ்சரிக் கிறார். கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்ற குரு அஸ்தமனம் பெற்று வலிமை இழந்திருக்கும் இந்த நேரத்தில், எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்க வழிவகுத்துக் கொடுப்பார். குறிப்பாக தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவு செய்ய நினைப்பவர்களுக்கு அதற்குரிய மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். அரசு வழிச் சலுகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். வழக்கு களில் நல்ல தீர்ப்பு வரும். உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் உங்களைத் தேடி வந்து நன்றி சொல்வதோடு மட்டுமல்ல, உங்கள் நல்ல செயல்களுக்கும் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–
நவம்பர்: 21, 22, 26, 27 டிசம்பர்: 5, 6, 7, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– பொன்னிற மஞ்சள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானப் பற்றாக்குறை அகலும். கணவன் – மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி வாங்கும் யோகம் உண்டு. பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலையில் இருந்தபடியே சுயதொழில் செய்யும் யோகமும் உண்டு. அரசுப் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். உடல்நலம் சீராகும். குடும்பப் பெரியவர்களின் சம்மதத்தோடு, உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் வாய்க்கும். குரு வழிபாடும், அறுபத்து மூவர் வழிபாடும் குதூகலத்தை வழங்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*